முதல்வர் விஜய்க்கு டைம் கொடுங்க : குஷ்பு | திரையரங்குகளுக்கு ஜாக்பாட்... இனி 5 காட்சி திரையிடலாம் : முதல்வர் விஜய் உத்தரவு | 'ஆனந்தம்' 25 வருடங்கள் : இயக்குனர் லிங்குசாமி நன்றி | நடிகர் தர்மேந்திராவுக்கு 'பத்ம விபூஷன்' விருது: மனைவி ஹேமமாலினி பெற்றார் | இயக்குனர் சேரனின் தாயார் காலமானார் | கேன்ஸ் திரைப்பட விழாவில் கவனத்தை ஈர்த்த ஐஸ்வர்யா ராய் | கார்த்தி 30 துவங்கியது | மராத்தி படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'ராஜா சிவாஜி' | இந்த முறையாவது சொன்ன தேதியில் ஜனநாயகன் வருமா? | கேரள கவர்னரிடமிருந்து கவுரவ முனைவர் பட்டம் பெற்ற மம்முட்டி |

ரஜினி முருகன், ரெமோ, சீமராஜா ஆகிய 3 படங்களில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். அந்த காலத்தில் இந்த ஜோடி வெற்றி கூட்டணியாக பேசப்பட்டது. இப்போது சிவகார்த்திகேயன் வேகமாக வளர்ந்துவிட்டார். இந்த வளர்ச்சி குறித்து கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறுகையில் 'நானும் அவரும் ஒன்றாக வளர்ந்தோம். 3 படங்களில் நடித்தோம். டிவியில் இருந்து வந்தவர் சிவகார்த்திகேயன். பின்னர், சினிமாவில் என்ட்ரியாகி கடுமையாக உழைத்து கொஞ்சம், கொஞ்சமாக வளர்ந்து இன்றைக்கு நல்ல நிலையில் இருக்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாக நடித்தோம். இன்றும் எங்கள் படங்கள் குறித்து மக்கள் பேசுவது மகிழ்ச்சி'' என்றார்.
மேலும் அவர் கூறுகையில் ''கல்யாணி பிரியதர்ஷன் வளர்ச்சியும் சந்தோசமாக இருக்கிறது. அவர் தந்தை பிரியதர்ஷன்தான் என்னை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். நானும் கல்யாணியும் நல்ல நட்பில் இருக்கிறோம், லோகா படம் பார்த்துவிட்டு அவரை பாராட்டினேன். தென்னிந்தியாவில் அதிக வசூல் செய்த ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் லோகா இடம் பெற்றுள்ளது பெருமை.
இப்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள நிறைய வருகின்றன. ஆனால், ஹீரோயின்களுக்கு சம்பளம் குறைவுதான். அவர்கள் நடிக்கும் படம் பிஸினஸ் ரீதியாக பல கோடி வசூலித்து, நல்ல லாபத்தை கொடுத்தால் அவர்கள் சம்பளமும் அதிகரிக்கும். என் அப்பா தயாரிப்பாளர் என்றாலும், எனக்கு படம் தயாரிப்பில் ஆர்வம் இல்லை' என்றார்.




