ரூ.10 கோடி டெபாசிட் செய்ய விஷாலுக்கு கோர்ட் உத்தரவு | விஜய் சேதுபதி, பூரி ஜெகன்னாத் படத்தின் படப்பிடிப்பு நிறைவு | ஒரு வருட இடைவெளிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் படம் | தெரு நாய்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நிவேதா பெத்துராஜ் | 2025 : 11 மாதங்களில் 250ஐக் கடக்கும் தமிழ்ப் பட வெளியீடுகள் | படம் இயக்க தயாராகும் கீர்த்தி ஷெட்டி | சிக்ஸ் பேக் மூலம் என்னை நானே செதுக்கி கொண்டேன் : மகத் சொல்கிறார் | 5 கேரக்டர்கள், 6 ஆண்டு உழைப்பு : ஒருவரே வேலை செய்த ஒன்மேன் | தனுஷின் ஹிந்தி படத்தில் இரண்டு கிளைமாக்ஸ் : கீர்த்தி சனோன் தகவல் | சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு |

நடிகர் விஷால் படங்கள் தயாரிக்க பைனான்சியர் அன்புச் செழியனிடம் ரூ.21 கோடி கடன் பெற்றிருந்தார். இந்த கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டது. அதற்கு பதிலாக விஷால் தயாரிக்கும் படங்களின் வெளியீட்டு உரிமையை தங்களுக்கு தர வேண்டும் என கூறியது. ஆனால் இதை மீறி விஷால் படத்தை வெளியிட்டார். மாறாக லைகாவிற்கு பணத்தையும் தரவில்லை. இதையடுத்து லைகா நிறுவனம் விஷாலுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் லைகாவிற்கு தர வேண்டிய ரூ.21 கோடியை 30 % வட்டியுடன் நடிகர் விஷால் செலுத்த வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஷால் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் தரப்பில் தாம் ஒன்றும் பெரிய பணக்காரன் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அப்படியென்றால் நீங்கள் திவால் ஆனவர் என அறிவிக்க தயாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். பின்னர் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த இரு நீதிபதிகள் அமர்வு, ரூ.10 கோடியை விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டனர்.




