ஆண்களை மட்டுமே தப்பு சொல்லக் கூடாது! ரவி மோகனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை மீரா சோப்ரா! | ராகவா லாரன்ஸ், அஜய் ஞானமுத்து புதிய கூட்டணி | ஜூனியர் என்டிஆரின் 43வது பிறந்தநாள்: ரசிகர்கள் தள்ளுமுள்ளு! | மீண்டும் ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் சூர்யா! | சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டு விரதம் ஆரம்பித்த ரவி மோகன்! | சூர்யா, த்ரிஷாவுக்கு நிம்மதியை கொடுத்த ‛கருப்பு' வெற்றி | கேன்ஸ் திரைவிழாவில் தாழ் திறவா | ராம் பொதினேனி படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, எஸ்.ஜே. சூர்யா | நடிகர் அவதாரம் எடுக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்? | ‛இம்மார்ட்டல்' படப்பிடிப்பு நிறைவு |

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம், நேற்று நடந்தது. கூட்டத்தின் முடிவில் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது 'முன்னாள் தலைவர் விஷால் மீது கூறப்பட்ட 8 கோடி ரூபாய் முறைகேடு பிரச்னை என்ன ஆனது' என்ற கேள்விக்கு தற்போதைய தலைவர் முரளி ராமசாமி அளித்த பதிலில் கூறியதாவது:
தயாரிப்பாளர் சங்க தலைவராக விஷால் இருந்தபோது 8 கோடி வரை வைப்புநிதியில் முறைகேடு நடந்திருப்பதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் குற்றம் சாட்டினார். அதை விசாரிப்பதற்காக அவர் தலைமையிலேயே கமிட்டி போடப்பட்டிருக்கிறது. விஷால் தலைமைக்கு பிறகு 2 ஆண்டுகள் சங்கம் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது அரசு சார்பிலேயே ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் அறிக்கையும் வந்திருக்கிறது. அதையும் கவனத்தில் கொண்டு விசாரிக்க வேண்டும். அது சம்பந்தமாகவும் கூடி பேசியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.