கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

எல்லா ஹீரோக்களுமே தங்கள் கேரியரில் ஒரு படத்திலாவது இரண்டு வேடங்களில் நடித்து விட வேண்டும் என்று விரும்புவார்கள். அந்த வகையில் முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் 'புதிர்'. இந்த படம் 'அஜேயா' என்ற பெயரில் கன்னடத்திலும் தயாரானது. விஜய், அழகு என்ற இரண்டு கேரக்டரில் முரளி நடித்தார்.
தமிழ் பதிப்பில் சந்தியாவும், கன்னட பதிப்பில் லீலாவதியும் நாயகியாக நடித்தார்கள். இரு மொழியிலும் தனித்தனி நடிகர்கள் நடித்தனர். இரண்டு மொழிகளுக்கும் இளையராஜா இசை அமைத்தார். சித்தலிங்கையாக இயக்கி தயாரித்தார். முரளி இணை தயாரிப்பாளராக இருந்தார்.
பணக்கார பெண்ணான நாயகியின் சொத்துக்களை அபகரிக்க அவரது உறவினர்கள் திட்டமிடுவார்கள். ஆனால் அவளோ தான் காதலனை மணந்து சொத்துக்களை அவனுக்கு உடமையாக்க திட்டமிடுவாள். அதனால் உறவினர்கள் காதலனை போன்ற தோற்றம் கொண்ட இன்னொருவனை கொண்டு சொத்துக்களை அடைய திட்டம் போடுவார்கள். யார் திட்டம் வெற்றி பெற்றது என்பதுதான் படம்.




