கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

தமிழ் சினிமாவின் தொடக்க காலத்தில் பல வெளிநாட்டு படங்களின் தழுவலில் படங்கள் உருவானது போன்று பல வெளிநாட்டு எழுத்தாளர்களின் கதைகளும் படமானது. அப்போது காப்பி ரைட் பிரச்னைகள் இல்லாததால் இதுபோன்ற படங்களும் எளிதாக வெளிவந்தன.
அதில் முக்கியமான படம் 'விடுதலை'. 1932ம் ஆண்டு இலக்கியத்துக்காக நோபல் பரிசு பெற்ற லண்டனை சேர்ந்த எழுத்தாளர் கல்ஸ்வொர்த்தி எழுதிய 'தி பர்ஸ்ட் அன்ட் தி லாஸ்ட்' என்ற நாவலை தழுவி இந்த படம் உருவானது. இதனை ராம்நாத் இயக்கினார்.
ஒரு திறமையான வழக்கறிஞரின் தம்பி ஒரு கொலை செய்து விடுவார். அவரை கொலை வழக்கில் இருந்து காப்பாற்ற அந்த வழக்கறிஞர் ஒரு அப்பாவி குதிரை வண்டிக்காரனை கொலை குற்றவாளி என்று சொல்லி தன் வாதத் திறமையால் அதை நிரூபித்து அவனை ஜெயிலுக்கு அனுப்பி விடுவார்.
என்றாலும் தம்பி தான் செய்த கொலைக்காக இன்னொருவன் ஜெயில் தண்டனை அனுபவிக்கிறானே என்ற மன உளைச்சலிலேயே இருப்பார். இந்த நிலையில் அவருக்கு லட்சம் ரூபாய் லாட்டரி பரிசு கிடைக்க அந்த பணத்தை குதிரை வண்டிக்காரன் குடும்பத்திடம் கொடுத்து விட்டு 'கொலை செய்தது நான்தான்' என்று கடிதம் எழுதிவைத்து விட்டு தற்கொலை செய்து கொள்வார்.
அந்த கடிதம் வழக்கறிஞர் கையில் கிடைக்கிறது. நீதிபதியாக பதவி உயர்வு பெறப்போகும் நேரத்தில் இந்த கடிதம் அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அதனை தீயிட்டு கொழுத்தி விட்டு அவர் நீதிபதியாகி விடுவார்.
தம்பியின் தற்கொலையை விசாரிக்கும் போலீஸ், நீதிபதிதான் அனைத்துக்கும் காரணம் என்பதை ஆதாரத்தோடு நிரூபிப்பார்கள். குதிரை வண்டிக்காரன் விடுதலை செய்யப்படுவான், நீதிபதிக்கு இரட்டை கொலை செய்ததற்காக தண்டனை வழங்கப்படும். இதுதான் அந்த கதை.
இதில் குதிரை வண்டிக்காரனாக சித்தூர் நாகையா நடித்திருப்பார். நோல்ட் அஞ்சலி ராவ் நீதிபதியாகவும், ஆர்.எஸ்.மனோகர் அவரது தம்பியாகவும் நடித்திருந்தார்கள். துப்பறியும் ஜார்னரில் உருவான இந்த படம் ஓரளவு நல்ல வரவேற்பையும் பெற்றது.




