முதல் படம் 'மெளனம் பேசியதே' ரீ ரிலீஸ்: வீடியோ வெளியிட்டு திரிஷா நெகிழ்ச்சி | மூன்று மொழிகளிலும் வேகமாக வளரும் அனஸ்வரா ராஜன் | அதர்வாவின் இதயம் முரளி படத்தில் பஹத் பாசில் | நடிகை Vs இயக்குனர் : வரலட்சுமி சரத்குமார் வெளியிட்ட வீடியோ | இதுதான் வெற்றியா... : கேள்வி கேட்ட ரஜினி மகள் | புற்றுநோய் பாதிப்பு பற்றி மனம் திறந்த மம்தா மோகன்தாஸ் | 'தலைவர் தம்பி தலைமையில் முதல் பிரிடேட்டர்' வரை; இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பாடகர் ஆன புகழ் : பிளாஷ்பேக் சொல்லி பீலிங் | இனியா நடித்த கவர்ச்சி படம் | 'சர்வம் மாயா' பட இயக்குனரை நேரில் சந்தித்து பாராட்டிய ராதிகா |

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவிற்கு முதல் முறையாக ஒரு வருடத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடக்கப் போகிறது. அதுவும் 12 மாத முடிவில் அல்ல, 11 மாத முடிவில் என்பது ஆச்சரியமான ஒன்று.
அக்டோபர் முதல் வாரத்தில்தான் இந்த வருடத்தில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்தது. டிசம்பர் முடிவதற்குள் அது 250ஐக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரண்டே மாதங்களில் 50க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்து ஆச்சரியப்படுத்தியுள்ளது.
இந்த வாரம் வெளியாக உள்ள 'ரஜினி கேங், பிபி 180, பிரைடே, ஒண்டிமுனியும் நல்லபாடனும், ரிவால்வர் ரீட்டா' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இந்தப் படங்களின் வெளியீட்டுடன் இந்த வருடம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 250ஐக் கடக்கப் போகிறது.
இந்த வருடம் முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் மேலும் 20க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகலாம். அதனால், இந்த வருடத்தில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 275ஐக் கடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியத் திரையுலகத்தில் வேறு எந்த ஒரு மொழியிலும் நடக்காத ஒன்று இது.