பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா | சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் மாளவிகா மனோஜ் | சினிமாக்காரர்களுக்கு ஞாயிறு கட்டாயம் விடுமுறை வேண்டும் : நிவின்பாலி வலியுறுத்தல் | சிபிஐ 6ம் பாகம் வருகிறது : இயக்குனர் மது தகவல் | தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்வாரா வடிவேலு | விரைவில் யூத் பட வெற்றி விழா |

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இளம் நடிகை கிர்த்தி ஷெட்டி. தெலுங்கு 'உப்பன்னா' படத்தில் அறிமுகமாகி தற்போது முன்னணிக்கு வந்திருக்கிறார்.
தமிழில் கார்த்தியுடன் 'வா வாத்தியார்', ரவி மோகனுடன் 'ஜீனி', பிரதீப் ரங்கநாதனுடன் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' அடுத்தடுத்து அவரது படங்கள் வர இருக்கிறது. ஆனாலும் அவர் படம் இயக்கும் ஆசையிலும் இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்தப் படம் மக்களுக்குப் பிடிக்குமா, ஒரு புது விஷயமா இருக்குமா என்று ஒரு சினிமா ரசிகையாகப் பார்த்துதான் கதைகளைத் தேர்வு செய்கிறேன். என்னை மேம்படுத்திக் கொள்வதற்காக கிளாசிக்கல், வெஸ்டர்ன்னு டான்ஸ் பயிற்சி எடுத்து வருகிறேன். பாக்ஸிங், மார்ஷியல் ஆர்ட்ஸ்னு ஆக்ஷனுக்கான பயிற்சிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறேன். ஆக்ஷன் கதைகளில் நடிக்க அதிக விருப்பம் உண்டு. ஹீரோயின் சென்ட்ரிக் படங்கள் பண்ணவும் ஆர்வம் இருக்கு.
எந்த சினிமாப் பின்னணியும் இல்லாமல்தான் இங்கே வந்தேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு ஒரு படம் எப்படித் தயாராகிறது என்பதுகூட எனக்குத் தெரியாது. ஆனா, இங்கே ஒவ்வொருத்தரோட கடின உழைப்பிற்குப் பின்னாடியும் அதிக பொறுப்பில் இயக்குநர்தான் இருக்கிறார். அதனால்தான் டைரக்ஷன் மீது பெரிய ஈர்ப்பு வந்தது. இது ரொம்ப சவாலான வேலை. எனக்கும் சவால்கள் பிடிக்கும். அதனால் இயக்கும் ஆசை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
ஹீரோயினாக நான் அறிமுகமான 'உப்பென்னா' இயக்குநர் புச்சி பாபு சாரிலிருந்து இப்ப பண்ணுற படங்களின் இயக்குநர்கள் வரை ஒவ்வொருத்தரையுமே குருவா நினைச்சு, டைரக்ஷன் கற்றுக் கொண்டிருக்கிறேன்.
இவ்வாறு கிர்த்தி ஷெட்டி கூறியுள்ளார்.