மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி | துல்கர் சல்மானுக்கு பறந்த திடீர் நோட்டீஸ்! | மகேஷ்பாபுவின் கிண்டலுக்கு பிரியங்கா சோப்ரா பதில் | புராண பின்னணியில் புதிய அனிமேஷன் பாகுபலி : டீசர் வெளியீடு | தென்னிந்திய சினிமா தான் 'பெஸ்ட்', ஹிந்தியில் 'ஸ்லோ': ஷ்ரத்தா தாஸ் | கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் சேதுபதி | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛மிடில் கிளாஸ்' : டீசர் வெளியீடு | இன்றைய ரசிகர்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு புத்திசாலிகளாக உள்ளனர் : யாமி கவுதம் | மிரட்டலின் பேரிலேயே ஜாய் உடன் திருமணம்: குழந்தையை கவனிக்க தயார்: மாதம்பட்டி ரங்கராஜ் |

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி தயாரிக்க, ரவி அரசு இயக்க, விஷால், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடிக்க 'மகுடம்' படம் ஆரம்பமானது. படப்பிடிப்பு ஆரம்பமாகி ஓரிரு வாரங்களுக்குப் பிறகு, அப்படத்தை ரவி அரசு இயக்கவில்லை என கிசுகிசு வெளிவந்தது. விஷால் தான் படத்தை இயக்கி வருவதாக பரபரப்பாகப் பேசப்பட்டது.
இந்நிலையில் தீபாவளியன்று, 'மகுடம்' படத்தை தானே இயக்கி வருவதாக அறிவித்தார் விஷால். இருந்தாலும் படத்தின் போஸ்டரில் கதை ரவி அரசு என்று இருந்தது. கதையின் உரிமையை மட்டும் வாங்கிக் கொண்டு அவருக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்து செட்டில் செய்துவிட்டார்கள் என்று தகவல் வெளியானது. ஆனால், பேசியபடி தொகையைத் தரவில்லை என்று தற்போது ரவி அரசு, இயக்குனர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இது குறித்து விஷால் மற்றும் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி ஆகியோரிடம் இயக்குனர்கள் சங்கம் சார்பாகப் பேசி வருகிறார்களாம். விரைவில் இது குறித்து சுமூக முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தாலும் நடிகர் சங்கத்தின் செயலாளராக இருக்கும் விஷால் இப்படி செய்தது குறித்து திரையுலகினர் சிலர் விமர்சித்துள்ளார்கள்.