கோடிகளில் சம்பளம்... ஆனாலும் மகிழ்ச்சி இல்லை : அனிருத் | பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! |

'பைசன்' படம் ஓடி களைத்துவிட்டது. இதுவரை 60 கோடிவரை வசூலித்து இருப்பதாக தகவல். அடுத்து தனுஷ் நடிக்க, தான் இயக்கும் படத்துக்கு நகரப்போகிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். பைசன் ஹீரோ துருவ் அடுத்த படத்தை அறிவிக்கவில்லை. அவர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நடிக்கிறார் என சொல்லப்பட்டாலும், அவரின் அடுத்த இலக்கு மணிரத்னம் படம் என்கிறார்கள். பைசன் மாதிரியான கிராமத்து படம் நடித்தபின், மணிரத்னம் படத்தில் நடித்தால் தனது கேரியர் மாறுபட்டதாக இருக்கும் என அவர் நினைக்கிறாராம்.
ஏற்கனவே, மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், 'ராவணன், பொன்னியின் செல்வன்' படங்களில் நடித்து இருக்கிறார். ஆகவே, தானும் அப்பா பாணியில் அவர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். மணிரத்னமும் 'தக்லைப்' தோல்வியில் இருந்து மீள சின்ன பட்ஜெட்டில், ஒரு காதல் படம், யூத்புல் படம் எடுக்க ஆசைப்படுவதால், விரைவல் துருவ் படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்கிறார்கள் கோலிவுட்டில்.




