மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி? | அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு |

கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா மற்றும் பலர் நடிக்க ஏஆர் ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த படம் 'தக் லைப்'. இந்த வருடத்தின் பெரும் தோல்விப் படமாக அமைந்து படம் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மட்டுமல்ல ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியைத் தந்தது.
இருந்தாலும் மணிரத்னம் அவரது அடுத்த படத்திற்கான வேலைகளில் இறங்கினார். அந்தப் படத்தில் நடிக்க சிலரது பெயர்கள் அடிபட்டு கடைசியாக விஜய் சேதுபதி நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார் என்ற தகவல் வெளியானது. படத்தில் அவரது ஜோடியாக நடிப்பதற்காக சாய் பல்லவியை அணுகி கதை சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கதையில் தனக்கான வேலை அதிகமில்லை என அவர் நடிக்க மறுத்துவிட்டார் என்றும் சொன்னார்கள். அதன்பின் சில மாற்றங்களைச் செய்து அந்தக் கதாபாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்து அவரிடம் மீண்டும் கதையைச் சொன்னார்களாம். அதைக் கேட்ட பின் படத்தில் நடிக்க சாய் பல்லவி சம்மதிவிட்டார் என்பது லேட்டஸ்ட் தகவல்.
தற்போது அவரை வைத்து படத்தின் போட்டோ ஷுட் நடந்து வருகிறதாம். 2026 பொங்கலுக்குப் பிறகு படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.




