ராகினி எம்எம்எஸ் 3 திரில்லர் படத்தில் இணைந்த தமன்னா | தமிழைப் போலவே தெலுங்கிலும் அதிக தியேட்டர்களில் வெளியாகிறது கருப்பு | பெத்தி பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி | கிரிக்கெட் வீரர் பயோபிக்கில் மீண்டும் இணையும் 'லகான்' கூட்டணி | அதிக பட்ஜெட், அதிக சம்பளம் : மாரி செல்வராஜ் படத்துக்கு சிக்கலா? | ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படம் இந்த சூழ்நிலையில் நடக்குமா? | திருப்பதி கோயிலில் சமுத்திரக்கனி வழிபாடு : விஜய்க்கு வாழ்த்து | திருமாவளவனை மறைமுகமாக விமர்சித்த நடிகை சனம் ஷெட்டி | பிரேமலு காமெடி நடிகருடன் மமிதா பைஜு ஜோடியாக நடிக்கும் புதிய படம் துவக்கம் | பெத்தி படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குனர் சுகுமாருடன் விசிட் அடித்த சிரஞ்சீவி |

தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் சமந்தா, தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் விவாகரத்து செய்து கொண்டார்கள். இந்த நிலையில் கடந்த ஆண்டில் நடிகை சோபிதா துலிபாலாவை நாகசைதன்யா இரண்டாவது திருமணம் செய்துகொண்ட நிலையில், சமீபத்தில் சமந்தா வெப் சீரியல் இயக்குனர் ராஜ் நிடிமொருவை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சமந்தாவுக்கு அவர் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் ஒரு பங்களா வாங்கி அதை கல்யாண பரிசாக கொடுத்துள்ளார்.