ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் | 'சிக்மா' படத்தில் நடிக்கிறாரா ஜேசன் சஞ்சய் ? | முதலாம் ஆண்டு திருமண நாளில் திருமண வீடியோவை வெளியிட்ட நாக சைதன்யா, சோபிதா துலிபலா | கடைசி நேரத்தில் திடீரென தள்ளி வைக்கப்பட்ட 'அகண்டா 2' | ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை |

எஸ்தாணு தயாரிப்பில் சிலம்பரசனை வைத்து 'அரசன்' என்கிற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் வட சென்னையில் நடைபெறும் கதைகளத்தை மையப்படுத்தி உருவாகிறது. இந்த படத்திற்காக பிரமாண்டமான வட சென்னை அரங்கம் அமைத்துள்ளனர். தற்போது இந்த படத்தை சுற்றி இருந்த அத்தனை பிரச்னைகளும் முடிவடைந்துள்ளது. இதனால் படத்தின் பூஜையை வருகின்ற டிசம்பர் 8ம் தேதியன்று கோவில்பட்டியில் நடத்துகின்றனர். இதையடுத்து டிசம்பர் 9ம் தேதியன்று முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கி இம்மாத இறுதிவரை நடத்த திட்டமிட்டுள்ளனர்.