ஏவிஎம் சரவணன் மறைவு : அஜித், விஜய், விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை | மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் |

பழம்பெரும் தயாரிப்பாளரும் முன்னணி ஸ்டுடியோ அதிபருமான ஏவிஎம் சரவணன் இன்று அதிகாலை காலமானார். ஏவிஎம் ஸ்டூடியோ அருகில் உள்ள சுடுகாட்டில் அவரது இறுதிச் சடங்கு நடந்தது. சென்னை மயிலாப்பூர் ஏவிஎம் அவின் யூவில் பல ஆண்டு காலம் வசித்து வந்த ஏவிஎம் சரவணன் சமீபகாலமாக ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள வீட்டிலேயே வசித்து வந்தார். வயது முதிர்வு மற்றும் உடல் நலக்குறைவு காரணமாக இன்று அதிகாலை காலமானார்.
பல சினிமா படப்பிடிப்புகள் நடந்த ஏவிஎம் மூணாவது ப்ளோரில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. திரையுலகினர் மற்றும் அவர் உறவினர்கள், நண்பர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நடிகர் ரஜினிகாந்த், சிவகுமார் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினாலும் பல முன்னணி திரை கலைஞர்கள், நடிகர்கள் ஏவிஎம் சரவணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை.
குறிப்பாக ஏவிஎம் மூலம் அறிமுகமானவரும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருமான கமல்ஹாசன் அஞ்சலி செலுத்த வரவில்லை. இது குறித்து விசாரித்தால் அவர் டில்லியில் ராஜ்யசபா பணிகளுக்காக இருக்கிறார். அவரால் உடனே விமானம் பிடித்து சென்னை வர முடியவில்லை என்று கூறப்பட்டது. அதேசமயம் மாலை கமல் சார்பில் இரங்கல் வீடியோ வெளியிடப்பட்டது.
அதேபோல் ஏவிஎம் சகோதர நிறுவனம் தயாரித்த வேட்டைக்காரன் படித்தில் நடித்த விஜய் ஏனோ அஞ்சலி செலுத்த வரவில்லை. ஒரு இரங்கல் அறிக்கை கூட தெரிவிக்கவில்லை.
திருப்பதி படத்தில் நடித்த அஜித்தும் வெளிநாட்டில் இருப்பதால் அஞ்சலி செலுத்தவில்லை, இரங்கலும் தெரிவிக்கவில்லை.
ஏவிஎம் ஹிட் படங்களில் ஒன்று ஜெமினி. அதில் நடித்த விக்ரம் அஞ்சலி செலுத்தவில்லை.
தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ரவி மோகன், கார்த்தி போன்ற ஹீரோக்களும் ஏவிஎம் சரவணன் உடலுக்கு மரியாதை செலுத்தவில்லை. கார்த்தி வெளியூரில் மார்ஷல் படப்பிடிப்பில் உள்ளார். இதனால் அங்கு படக்குழு சார்பில் சரவணன் போட்டோவிற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இயக்குனர்களில் மணிரத்னம், ஷங்கர், பாக்யராஜ் உள்ளிட்ட முன்னணி இயக்குனர்கள் அஞ்சலி செலுத்தினாலும், பல இளம் இயக்குனர்கள் ஏவிஎம் ஸ்டூடியோவில் தங்கள் படப்பிடிப்பை நடத்தியவர்கள் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை.
நடிகைகளில் கேஆர் விஜயா, காஞ்சனா, வாணி போஜன் உள்ளிட்ட சிலர் மட்டுமே இன்று வந்திருந்தனர். திரிஷா, நயன்தாரா போன்ற இன்றைய முன்னணி நடிகைகள் யாரும் வரவில்லை.
அதேபோல் ஏவிஎம் நிறுவனத்திற்காக இசையமைத்த பல முன்னணி இசை அமைப்பாளர்கள் ஏவிஎம் தயாரித்த 175 படங்களில் நடித்த பல நடிகர் நடிகைகள் ஏனோ இறுதி சடங்கில் கலந்து கொள்ளவில்லை.