மரணத்தை வைத்து மீம்ஸ் போடுவதா? ஜான்வி கபூர் கடும் ஆதங்கம்! | ஏவிஎம் சரவணன் உடல் தகனம் | உங்கள் பெயர் சொல்லும் பிள்ளைகளில் நானும் ஒருவன் : சரவணனுக்கு கமல் புகழ் அஞ்சலி | இந்த வார ஓடிடி ரிலீஸ்: சிறிய படங்கள் தான்....ஆனா ஒவ்வொன்னும் செம'வொர்த்'..! | 'பாகுபலி தி எபிக்' புரமோஷனுக்காக ஜப்பான் சென்ற பிரபாஸ்! | மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? |

சமீபத்தில் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா மரணமடைந்தார். அப்போது சோசியல் மீடியாவில் பல வகையான செய்திகளை மீம்ஸ்ஸாக வெளியிட்டார்கள். இந்த நிலையில் அது குறித்து ஸ்ரீதேவியின் மூத்த மகளான ஜான்விகபூர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ''என்னுடைய தாயார் ஸ்ரீதேவி இறந்தபோதும் சோசியல் மீடியாவில் அவரைப் பற்றி பலதரப்பட்ட செய்திகள் மீம்ஸாக வெளியானது. அதையடுத்து நான் கூட என் தாயின் மரணம் குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை. அப்படி நான் வெளியிட்டால் அதை வைத்துக் கூட நான் விளம்பரம் தேட முயற்சிப்பதாக சோசியல் மீடியாவில் செய்தி பரப்பி இருப்பார்கள். அதன் காரணமாகவே என் தாயார் குறித்து பேட்டிகளில் பேசுவதைக் கூட நான் தவிர்த்து வருகிறேன்.
எந்த விஷயமாக இருந்தாலும் அதை வெளிப்படையாக பேசுவதற்கு ரொம்ப பயமாக உள்ளது. இன்றைக்கு சோஷியல் மீடியாவில் அந்த அளவுக்கு ஆளாளுக்கு மீம்ஸ்களை வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களை வேதனை படுத்திக் கொண்டு வருகிறார்கள்'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார் ஜான்வி கபூர்.