Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

ஸ்ரீதேவி நடித்த 'மாம்' படத்தின் 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது

04 மார், 2026 - 10:31 IST
எழுத்தின் அளவு:
Sridevis-Mom-Part-2-begins-shooting
Advertisement


கடந்த 2017 ஹிந்தியில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பில் வெளியான படம் 'மாம்'. இந்த படத்தை ரவி உத்யவர் என்பவர் இயக்கியிருந்தார். அக்ஷய் கண்ணா, நவாசுதீன் சித்திக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த இந்த படம் 30 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 175 கோடி வரை வசூலித்து வரவேற்பு பெற்றது. ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான கடைசி படமும் இதுதான். அவரது மறைவிற்கு பின் அடுத்த வருடமே வழங்கப்பட்ட 65வது தேசிய விருதுகள் பட்டியலில் சிறந்த நடிகைக்கான விருதையும் ஸ்ரீதேவிக்கு இந்த படம் தேடி தந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தனது மகள் ஜான்வி கபூர் நடிப்பில் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணம் ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனி கபூருக்கு இருந்தது. அந்த வகையில் தற்போது மாம் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நொய்டாவில் உள்ள பிலிம் சிட்டியில் துவங்கியுள்ளது. முதல் பாகத்திற்கு கதை திரைக்கதை எழுதிய கிரிஷ் கோஹில் என்பவர் இந்த இரண்டாம் பாகத்தை இயக்குகிறார். இப்படத்தில் பெங்காலி நடிகர் ஆன ஜிஷு சென்குப்தா மற்றும் டெலிவிஷன் நடிகையான கரிஷ்மா டன்னா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிக்கிறாரா என்பது பற்றி இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
சல்மான்கான் உடன் ரொமான்ஸ் காட்சியில் நடித்த அவரது வளர்ப்பு குதிரைசல்மான்கான் உடன் ரொமான்ஸ் ... தவறான கோணங்களில் புகைப்படம் எடுப்பதா : ருக்மிணி வசந்த் கண்டனம் தவறான கோணங்களில் புகைப்படம் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap