'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

இயக்குனராக இருந்து நடிகர் ஆனவர் சமுத்திரக்கனி. அவர் பெரும்பாலும் போலீஸ் கதாபாத்திரங்களில் அதிகமாக நடித்துள்ளார். சுமார் 40 படங்களில் போலீசாக நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள 'தடயம்' என்ற வெப் சீரிஸ் வெளியாகி உள்ளது. இதிலும் அவர் போலீசாக நடித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: நான் அதிகம் குழந்தைகள், அன்பு, நட்பு சார்ந்த விஷயங்களைத்தான் விரும்புவேன். அன்பை ஆதாரமாகக்கொண்டுதான் இந்த உலகம் இயங்குகிறது என்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கை உண்டு. நான் 40 போலீஸ் கேரக்டர்களுக்கு மேல் நடித்துவிட்டேன்.
காக்கி யூனிபார்ம் போடுவது என்பது பெரிய பெருமை. எல்லோரும் அதற்கு கச்சிதமாகப் பொருந்திவிட மாட்டார்கள். அதற்கு ஓர் உயரம், ஒரு தோற்றம், தெளிவு வேண்டும். அந்த கேரக்டரில் ஒரு நேர்மை இருக்க வேண்டும். 'ரைட்டர்' படம், அந்த கேரக்டரில் என்னை வேறு மாதிரி கொண்டுபோய்ச் சேர்த்தது.
என்னை போலீஸ் கேரக்டருக்குள் கொண்டு வந்தது வெற்றி மாறன். 'விசாரணை' படம் எனக்குக் கொண்டுவந்து சேர்த்த மரியாதை மிகவும் பெரியது. அது ஓர் ஆழமான படைப்பு. அதுபோல் ஒரு படைப்பை எங்களால் மீண்டும் செய்ய முடியுமா என்று தெரியவில்லை. ஓர் அற்புதம்போல அந்தப் படம் உருவாகிவிட்டது. அதை அப்படித்தான் பார்க்கிறேன். 'ரைட்டர்' படமும் அப்படிச் செய்ததுதான். அது போன்ற கதைகள்தான், இந்த திரைப் பயணத்தின் ருசி. இவ்வாறு கூறினார் சமுத்திரக்கனி.




