'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

கன்னட தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் தயாரித்துள்ள தமிழ் படம் 'வவ்வல்ஸ்'. 5 கதைகளை கொண்ட இந்த ஆந்தாலஜி படத்தை திலிப்குமார், சங்கீத், ஹேமந்த் குமார், சந்தோஷ் ரவி மற்றும் ஜெகன் ராஜேந்திரன் ஆகிய ஐந்து இயக்குநர்கள் இயக்கியுள்ளனர். யூகி சேது, சின்னி ஜெயந்த், சம்யுக்தா விஸ்வநாதன், ராஜ் அய்யப்பா, தீபக் பரமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சரவண சுப்ரமணியம் இசையமைத்துள்ளார். மார்ச் 13 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
“இந்த படத்தில் 5 விதமான காதல் கதைகள் இருக்கிறது. ஒவ்வொன்றும் தனிதன்மையான காதல் கதை. இன்றைய இளைஞர்களின் மனவோட்டத்தையும், காதல் குறித்த அவர்கள் பார்வையையும் காட்டும் படம். இந்த 5 காதல்களில் ஏதாவது ஒன்றையாவது இன்றைய இளைஞர்கள் கடந்து சென்றிருப்பார்கள். இது இளைஞர்களுக்கான படம் மட்டும் அல்ல. இன்றைய இளைஞர்களை புரிந்து கொள்ள பெரியவர்களுக்கான படமும் கூட” என்கிறார் தயாரிப்பாளார் ராஜு ஷெரேகா.




