மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' | பிளாஷ்பேக்: காப்பி ரைட் வழக்கில் சிக்கிய சிவாஜி படம் | இந்தியா, ஆசியான் திரைப்பட விழா: சென்னையில் தொடங்கியது | முதல் நாள் வசூலில் முந்தும் 'டியூட்' | அஜித் 64 : தீபாவளி அறிவிப்பு? | சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா |
நடிகர் கமல்ஹாசன் நடிகை சரிகாவை காதலித்து 1998ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் என இரு மகள்கள் உள்ளனர். இவர்களும் தற்போது நடிகைகளாக உள்ளனர். 2004ல் கருத்து வேறுபாடு காரணமாக கமல்ஹாசனை விவாகரத்து செய்தார் சரிகா. அதன் பின்னரும் சில பாலிவுட் படங்களில் சரிகா நடித்து வந்தார்.
இந்த நிலையில் சரிகா நடிப்பில் வெளியாகியுள்ள ‛மாடர்ன் லவ் மும்பை' என்னும் ஆந்தாலஜி படம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓடிடி.,யில் வெளியாகியுள்ள இப்படத்தில் 6 குறும்படங்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துமே விவகாரமான காதல் கதைகளை கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதில், சரிகா நடித்துள்ள குறும்படத்தில் சரிகாவை, 30 வயதான இளைஞர் காதலிப்பது போல் காட்சியமைப்பு உள்ளது. இதனை அறிந்ததும் இளைஞரை அழைத்து கண்டிப்பது போலவும், ஆனாலும் சரிகா அந்த இளைஞரை ஏக்கத்துடன் பார்ப்பது போலவும் கதை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த குறும்படம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.