ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! | 'தி ராஜா சாப்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் கயல் ஆனந்தி! | புதிதாக மூன்று படங்களை ஒப்பந்தம் செய்த ரியோ ராஜ்! | தேசிய விருது கிடைத்தால் மகிழ்ச்சி: துல்கர் சல்மான் | முதல் முறையாக ரவி தேஜா உடன் இணையும் சமந்தா! | சிம்புவின் மீது இன்னும் வருத்தத்தில் சந்தியா! | 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கவுரவிக்கப்படும் ரஜினிகாந்த்- பாலகிருஷ்ணா! |

கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் உறுதியாகிவிட்டது. ஆனால் சுந்தர். சி விலகிவிட்டதால், இயக்குனரை தேடி வருகிறார்கள். வெங்கட்பிரபு, கார்த்திக் சுப்புராஜ், சிறுத்தை சிவா உட்பட பலர், அந்த படத்தை இயக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால், ரஜினி இன்னமும் கதை விஷயத்தில் முடிவெடுக்க முடியாமல் இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில், அந்த படத்தை தனுஷ் இயக்கப்போகிறார் என்று கோலிவுட்டில் தகவல் கசிந்தது. இது உண்மையா என விசாரித்தால், 'ரஜினியின் மருமகனாக இருந்தபோது கூட, ரஜினியின் தீவிர ரசிகராகவே தன்னை வெளியில் காண்பித்தார் தனுஷ். மண வாழ்க்கையில் பிரிவு வந்தபின்னரும் அந்த நிலையில் இருந்து மாறவில்லை.
ரஜினியும் இதுவரை தனுஷை குறை சொன்னது இல்லை. ஆனால், இருவரும் இதுவரை எந்த படத்திலும் இணைந்து கூட நடித்தது இல்லை. சில படங்களை தனுஷ் இயக்கி இருந்தாலும் ரஜினி படத்தை இயக்கும் அளவுக்கு சிறந்த இயக்குனரா என பலருக்கும் டவுட். தவிர, நாலைந்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் தனுஷ். அதை முடிக்கவே 2 ஆண்டுகள் ஆகும்.
ரஜினி படமென்றால் கதை விவாதம், முன்னேற்பாடு பணிகளுக்கு பல மாதங்கள் ஆகும். எனவே, தனுஷ் இயக்குவது டவுட் தான். தவிர, ரஜினியும், மகள் ஐஸ்வர்யா மனநிலையை கருத்தில் கொண்டு தனுஷ் படத்தில் நடிப்பதை தவிர்ப்பார். இதை மீறி இரண்டு பேரும் இணைந்தால் அது ஆச்சரியம்தான் என்கிறார்கள்.