மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

கிட்டத்தட்ட 47 வருடங்களுக்கு பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடிக்கும் படம் தற்போது உருவாகிறது. 'ஜெயிலர்' படத்தின் இரண்டு பாகங்களைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார், இதன்மூலம் ரஜினியை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை இயக்கும் இயக்குனர் என்கிற பெருமையையும் நெல்சன் பெற்றுள்ளார். அது மட்டுமல்ல இந்த படத்தில் மீண்டும் ஒரு புதுமையை செய்ய இருக்கிறாராம் நெல்சன்.
அதாவது கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சினிமா டிஜிட்டலுக்கு மாறிவிட்டது. அனேகமாக கடைசியாக பிலிம் ரோலில் தமிழில் வெளியான படம் 'தனி ஒருவன்' என்று தான் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பிலிம் ரோலை பயன்படுத்தி ரஜினி, கமல் இருவரும் நடிக்கும் படத்தை இயக்குவதற்கு நெல்சன் திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு ரஜினி, கமல் இருவருமே கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.