மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

கடந்த சில மாதங்களுக்கு முன்பு மலையாளத்தில் 'எக்கோ' என்கிற திரைப்படம் வெளியானது. 'கிஷ்கிந்தா காண்டம்' என்கிற படத்தின் மூலம் பிரபலமான இயக்குனர் டிஞ்சித் அய்யத்தன் என்பவர் இந்த படத்தை இயக்கியிருந்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் இந்த படம் பெற்றது. இதில் நடிகர்கள் வினித், நரேன் ஆகியோரை தவிர அவ்வளவாக அறிமுகம் இல்லாத நடிகர்கள் தான் நடித்திருந்தனர். அதேசமயம் இந்த படத்தின் கதையின் நாயகியாக நடித்திருந்த மேகாலயா மாநிலத்தை சேர்ந்த ஒய்வு பெற்ற பேராசிரியையான பியானோ மோமின் என்பவரின் நடிப்பு வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.
நடிகர் தனுஷ் இந்த படம் பார்த்துவிட்டு அவரது நடிப்பு குறித்து சிலாகித்து பாராட்டி இருந்தார். இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு தளம் ஒன்றில் தனுஷை நேரில் சந்தித்துள்ளார் இயக்குனர் டிஞ்சித் அய்யத்தன். இந்த சந்திப்பின் போது படம் குறித்து விலாவாரியாக பாராட்டிய தனுஷ் எப்படி நடிகை பியானோ மோமினை அந்த கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுத்தீர்கள் என்கிற தனது ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். இவர்களது சந்திப்பை தொடர்ந்து டிஞ்சித் அய்யத்தன் டைரக்ஷனில் தனுஷ் நடிப்பாரா என்பது போன்று யூகங்கள் கிளம்பியுள்ளன.
அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பும் மலையாளத்தில் இதேபோல மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'மஞ்சும்மேல் பாய்ஸ்' இயக்குனர் சிதம்பரத்தை நேரில் தனுஷ் அழைத்து பாராட்டிய போதும் இதேபோன்று இவர்கள் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா என்று கேள்வி எழுந்தது குறிப்பிடத்தக்கது. தனுஷை பொறுத்தவரை நல்ல படங்களை கொடுக்கும் இயக்குனர்களை அழைத்து பாராட்ட தயங்குவதில்லை என்பது மட்டும்தான் இவர்களது சந்திப்பிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.