வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

'கர்ணன்' படத்திற்கு பிறகு மாரி செல்வராஜ் தனுஷின் 56வது படத்தை இயக்குவதாகவும், இதனை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிப்பதாகவும் அறிவிப்புகள் வெளியானது.
கடந்த சில மாதங்களாக இதன் முன் தயாரிப்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மாரி செல்வராஜ் அளித்த பேட்டி ஒன்றில் தனுஷ் 56 படம் குறித்து கூறியதாவது, "அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க உள்ளேன். செப்டம்பரில் அந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஒரு பேண்டஸி, வரலாற்று மற்றும் அரசியல் கலந்த திரைப்படமாக உருவாகிறது. என் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையும்.
என் படங்களுக்கு ஒரு தொடங்கப்புள்ளி இருந்தது. அதுவே 'பரியேறும் பெருமாள்', 'கர்ணன்', 'மாமன்னன்', 'வாழை' மற்றும் 'பைசன்'படங்கள் எடுக்க காரணமாக இருந்தது. என் அடுத்த படத்தில் அந்த தொடக்கத்தின் ஆணிவேரை பற்றி சொல்லப்போகிறேன். அதை கண்டுபிடித்து முழுவதுமாக அழிக்க முயன்றால் என்ன நடக்கும் என்பதே, தனுஷ் நடிக்கும் படத்தின் கரு. ” எனத் தெரிவித்துள்ளார்.




