ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது | போகிற போக்கில் கதைகளை தேர்ந்தெடுக்காதீர்கள் ; மிருணாள் தாக்கூருக்கு 'கல்கி' இயக்குனர் வேண்டுகோள் |

ஹிந்தியில் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்து வெளிவந்த 'துரந்தர்' படத்தின் முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு 'துரந்தர்' 2ம் பாகம் வருகின்ற மார்ச் 19ம் தேதியன்று பான் இந்திய படமாக வெளியாகிறது. தற்போது இத்திரைப்படம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் நீளம் கொண்ட படமாக வெளியாகும் என வெளிநாட்டு டிக்கெட் புக்கிங் தளத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.
மறுபுறம் இதே மார்ச் 19ம் தேதியன்று கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள 'டாக்சிக்' படமும் பான் இந்திய படமாக வெளியாகிறது. இந்த படத்தின் நீளமும் 3 மணி நேர 25 நிமிடங்கள் கொண்ட படமாக வெளியாகும் என வெளிநாட்டு டிக்கெட் புக்கிங் தளத்தில் குறிப்பிட்டுள்ளனர். மேலும், இந்த இரண்டு படங்களுக்கும் 'ஏ' சான்றிதழ் தான் தணிக்கை கிடைக்க வாய்ப்புள்ளது என சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.




