Advertisement

சிறப்புச்செய்திகள்

‛ஜெயிலர் 2' படப்பிடிப்பில் யோகி பாபுவிடம் அடிக்கடி சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்ட ரஜினிகாந்த் | பாலகிருஷ்ணாவுடன் செல்பி எடுக்க பயப்படும் ‛காந்தாரா' ஒளிப்பதிவாளர் | ‛ஆடு 3' படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாரா நிகிலா விமல் ? ; இயக்குனர் பதில் | ஒருவர் பின் ஒருவராக போகிறார்கள் ; நண்பர் மறைவால் அமிதாப் பச்சன் வேதனை | ஷோரூம் திறப்பு விழாவில் அரசியல் பஞ்ச் டயலாக் பேசிய ரவி மோகன்! | தனது 100வது படத்தில் முதல் பட நாயகனான மோகன்லாலை நடிக்க வைக்கும் பிரியதர்ஷன்! | அஜித்துக்கு 30 லட்சம் மதிப்பிலான காரை பரிசளித்த மஹிந்திரா நிறுவனம்! | விஜய் குறித்த கேள்வி: பதில் கொடுக்காமல் மவுனமாக கடந்து சென்ற திரிஷா! | உயரே சென்றாலும் உதவியவர்களை மறக்காதே: கென் கருணாஸிற்கு தனுஷ் அறிவுரை | '29' படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியது! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிப்ரவரி 2026 : வெளியான 22 படங்களில் எத்தனை வெற்றி?

01 மார், 2026 - 12:28 IST
எழுத்தின் அளவு:
February-2026-How-many-hits-were-there-out-of-the-22-films-released
Advertisement


2026ம் ஆண்டு ஆரம்பித்து இரண்டு மாதங்கள் வேக வேகமாக ஓடிப் போய்விட்டது. முதல் மாதமான ஜனவரி மாதத்தில் விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு, இதுவரையில் ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.

ஜனவரி மாதத்தில் தியேட்டர்களில் வெளியான 22 படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில்' படம் மட்டும்தான் அனைவருக்கும் லாபத்தைக் கொடுத்த ஒரு படமாக இருந்தது. 'பராசக்தி' படம் 100 கோடி வசூலைக் கடந்தது என்று அறிவிக்கப்பட்டாலும் எதிர்பார்த்தபடி லாபம் இல்லை என்பதுதான் பாக்ஸ் ஆபீஸ் தகவல்.

பிப்ரவரி மாதத்திலாவது 'ஜனநாயகன்' தணிக்கை விவகாரம் முடிந்து படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டு, அது மீண்டும் ஏமாற்றத்தைத் தந்தது. இப்போதைய சூழ்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வெளியாகும் வரை இப்படம் வர வாய்ப்பில்லை என்றுதான் சொல்கிறார்கள்.

பிப்ரவரி மாதத்தில் எந்த ஒரு பெரிய படங்களும் வெளியாக வாய்ப்பில்லை என்றுதான் மாதத்தின் துவக்கத்திலேயே முடிவானது. அதற்கேற்றபடிதான் கடந்த மாதத்தில் படங்கள் வெளிவந்தன.

பிப்ரவரி 6ம் தேதி வெளியான படங்களில் 'வித் லவ்' படம் மட்டுமே வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடியது. அப்படம் 25 கோடி வசூலைக் கடந்திருக்கும் என்கிறார்கள். கடந்த வருடத்தின் முக்கிய வெற்றிப் படமான 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை இயக்கிய அபிஷன் ஜீவிந்த் இப்படத்தில் நாயகனாக அறிமுகமாகி நடிப்பிலும் வெற்றியைப் பதித்துள்ளார்.

பிப்ரவரி 13ம் தேதி வெளியான படங்களில் சசிகுமார் நடித்து வெளிவந்த 'மை லார்ட்' படத்திற்கு ஓரளவு நல்ல விமர்சனங்களும், சுமாரான வரவேற்பும் கிடைத்தது. படம் வெற்றி பெற்றதாக நன்றி தெரிவிக்கும் சந்திப்பையும் படக்குழு நடத்தினார்கள். படத்தின் வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடி நிறுவனம் படத்தை வாங்கியதும் அதற்குக் காரணமாக அமைந்தது. 'ஏ' படமாக வெளிவந்த 'ஸ்வீட்டி நாட்டி கிரேஸி' படம் சில தியேட்டர்களில் ஓரளவு வசூலைப் பெற்றதாகத் தகவல்.

பிப்ரவரி 20ம் தேதி வெளியான படங்களில் ஒரு படம் கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவில்லை.

பிப்ரவரி 27ல் வெளியான படங்களில் ராதிகா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்த 'தாய் கிழவி' படத்திற்கு நல்ல விமர்சனங்களும் குறிப்பிடத்தக்க வசூலும் கிடைத்து வருகிறது. வரும் நாட்களில்தான் இந்தப் படத்திற்கான வசூல் எப்படி இருக்கப் போகிறது என்பது தெரிய வரும்.

பிப்ரவரி மாதம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியான படமாக ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'லக்கி த சூப்பர்ஸ்டார்' படம் பிப்ரவரி 20ம் தேதி வெளியானது.

மொத்தமான லாபம் என்பதில் ஜனவரி மாதத்தில் வெளியான படங்களில் 'தலைவர் தம்பி தலைமையில்' படம் இருந்தது. பிப்ரவரி மாதத்தில் அப்படியானதொரு படமாக 'வித் லவ்' படம் அமைந்தது.

வழக்கம் போல ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் எந்த ஒரு வெள்ளிக்கிழமையிலும் இடைவெளி இல்லாமல் நான்கைந்து படங்கள் வெளிவருவது வழக்கமாக உள்ளது.

நாளை மார்ச் 2ம் தேதி முதல் மாநில பாடத் திட்டத்தின் 12ம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தேர்வுகள் ஆரம்பமாகிறது. அடுத்தடுத்து 10ம் வகுப்பு மற்றும் இதர வகுப்புகளுக்கான தேர்வுகள் ஆரம்பமாக உள்ளன.

ஏப்ரல் மாதக் கடைசி வரையிலும் தேர்வுகள் நடைபெற உள்ளது. அதனால் அடுத்த இரண்டு மாதக் காலங்களுக்கு தியேட்டர்கள் பக்கம் ரசிகர்கள் வருவது குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம். தேர்வுகள் முடிவடையும் முன்னரே தேர்தல் பரபரப்பும் அதிகமாகும். அதற்குள் ஐபிஎல் போட்டிகளும் ஆரம்பமாகிவிடும். இத்தனையும் கடந்து புதிய படங்கள் தாக்குப் பிடிக்க வேண்டும். இருந்தாலும் தொடர்ந்து சில பல சிறிய பட்ஜெட் படங்கள் அவர்களது வெளியீட்டு அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பிப்ரவரி 2026 வெளியான படங்கள்…

பிப்ரவரி 6

கில்லி மாப்பிள்ளை, காதல் கதை சொல்லவா, பாடும் குயிலே, ரெட் லேபிள், வித் லவ், யோகிடா

பிப்ரவரி 13

ட்ரீம் கேர்ள், கா, மை லார்ட், மைலாஞ்சி, பூக்கி, ஸ்வீட்டி நாட்டி கிரேஸி

பிப்ரவரி 20

அறிவான், லவ் சப்ஸ்க்ரைப் ஷேர், எம்ஜி 24, மை டியர் டாலி, சிவ சம்போ

பிப்ரவரி 27

ஆழி, ஏ படம், போர்த் புளோர், தாய் கிழவி

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
திரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் தொடக்கம்: தனுஷ் பேச்சுதிரைப்பயணத்தில் 2ம் அத்தியாயம் ... ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான படங்கள்! ஒரே நாளில் வெளியாகும் இரண்டு நீளமான ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap