மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

சென்னையில் நடந்த வேல்ஸ் பல்கலைக்கழக விழாவில் சிறப்பு விருந்தினராக நடிகர் தனுஷ் கலந்துகொண்டார். அதில் பேசுகையில், “நமக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு. என் திரைப்பயணத்தின் இரண்டாம் அத்தியாயத்தை இப்போது தொடங்கியுள்ளேன்.
எனக்கும் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும் தொடர்பு உண்டு. என் முதல் படம் 'துள்ளுவதோ இளமை' இங்கே தான் எடுத்தோம். அதுமட்டுமல்ல அந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் ஐசரி கணேஷ் சாரிடம் பூட்ஸ் காலால் அடிவாங்கி இருக்கிறேன். பள்ளி மற்றும் கல்லூரி நாட்கள் தான் நம் வாழ்நாளில் சிறந்த நாட்களாக அமையும். மெடிட்டேஷ்ன் மற்றும் மேனிபெஸ்டேஷன் இவை இரண்டும் நீங்கள் எட்ட துடிக்கும் உயரங்களை அடைய உதவும் இதை பின்பற்றுங்கள்”''என்றார்.
விழாவில் பேசிய ஐசரி கே கணேஷ், “என்னுடைய கனவு பிராஜக்ட் என்றால் அது நடிகர் தனுஷ் அவர்களை வைத்து எடுக்க இருக்கும் 'வட சென்னை 2' தான் என்றே கூறலாம். அதேபோல் தனுஷ் நடித்துள்ள 'கர' திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் 30ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது” என்றார்.