வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

தமிழ் சினிமாவில் அந்தக் காலம் தொட்டு, இந்தக் காலம் வரை மலையாள நடிகைகள் நமது ரசிகர்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தைப் பிடித்துவிடுவார்கள்.
பத்மினி, கேஆர் விஜயா என ஆரம்பமான மலையாள நடிகையரின் வருகை, அம்பிகா, ராதா, ரேவதி, ஷோபனா, ஊர்வசி, நதியா, அசின், நயன்தாரா என தொடர்ந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட காலத்திலோ அல்லது நீண்ட காலத்திலோ மிகவும் பிரபலமாகவும், சில பல வெற்றிப் படங்களில் நடித்தவர்களாகவும் இருந்தார்கள். நயன்தாரா 20 வருடங்களைக் கடந்தும் தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கிறார்.
அவர்கள் மட்டுமல்லாது சில படங்களில் நடித்தாலும், அமலா பால், மஞ்சு வாரியர், பார்வதி, ஐஸ்வர்ய லெட்சுமி, அனுபமா பரமேஸ்வரன், நிகிலா விமல், ரஜிஷா விஜயன், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், அன்னா பென், மகிமா நம்பியார், கல்யாணி பிரியதர்ஷன் என இன்னும் சிலரை பட்டியலில் சேர்க்கலாம்.
அவர்களது வரிசையில் அடுத்த தலைமுறை நடிகையர் இப்போது வந்துள்ளார்கள். ஜிவி பிரகாஷ்குமார் நடித்த 'ரெபெல்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும், 'டியூட்' படத்தின் மூலம் பரபரப்பாகப் பேசப்பட்டார் மமிதா பைஜு. அவர் நடித்த மலையாளப் படமான 'பிரேமலு' படமே அவரை தமிழ் ரசிகர்களைக் கவர ஆரம்பித்தது.
நாளை வெளியாக உள்ள 'வித் லவ்' படம் மூலம் அனஸ்வரா ராஜன் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பார் என படம் பார்த்தவர்கள் பாராட்டி வருகிறார்கள். த்ரிஷா முதன்மைக் கதாநாயகியாக நடித்த 'ராங்கி' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானாலும், அடுத்து 'தக்ஸ்' படத்தில் நடித்தாலும் கண்டுகொள்ளப்படாத ஒருவராக இருந்தார் அனஸ்வரா. 'வித் லவ்' படத்தின் மூலம் 2 கே கிட்ஸ்களிடம் 'லவ்'வைப் பெற்றுவிடுவார் என்கிறார்கள்.




