திருமண போட்டோக்களை சோசியல் மீடியாவில் இருந்து நீக்கிய சர்வானந்த் ; மீண்டும் ஒரு நட்சத்திர பிரிவு ? | அமெரிக்காவில் வெளியிடப்பட்ட தனது பட டிரைலர் வெளியீட்டில் காயத்ரி மந்திரம் உச்சரித்த வித்யுத் ஜம்வால் | என்னுடைய பழைய படங்களை இப்போது பார்க்கும்போது கண்கள் கலங்கும் ; மோகன்லால் | 17 வருடங்களுக்கு முன்பே கேட்ட 'பள்ளிச்சட்டம்பி' கதையில் கெஸ்ட் ரோலில் நடித்த பிரித்விராஜ் | முட்டுக்கட்டையால் 'அப்செட்'டில் நடிகை | முதல் படத்திலேயே கடனாளியான வாரிசு | 'தாய்கிழவி' ராதிகாவிற்கு தேசிய விருது: பாரதிராஜா உறுதி | 2027 டிசம்பரில் ரிலீசாகும் 'மகா அவதார் பரசுராம்' | 'கர' படத்தில் பிரித்விராஜ் நடிக்காதது ஏன்? இயக்குனர் விக்னேஷ் ராஜா விளக்கம் | சதீஷ் பட இயக்குனர் உடன் கைகோர்க்கும் சந்தானம்! |

தமிழ் சினிமாவில் காதல் கிசுகிசு என்பது அந்தக் காலம் தொட்டு இருக்கிறது. அதன்பின் காதல் திருமணம் செய்து கொண்டார்கள், திருப்பதி சென்று திருமணம் செய்து கொண்டார்கள், வீட்டிற்குத் தெரியாமல் ஓடிப் போய்த் திருமணம் செய்து கொண்டார்கள் என பல பரபரப்பு செய்திகள் வந்துள்ளன.
ஆனால், சமீப காலங்களில் விவாகரத்து செய்திகள் என்பது அதிகமாக வர ஆரம்பித்து அதிர்ச்சியைக் கொடுத்து வருகின்றன. கடந்த சில வருடங்களில் மட்டும் சிலரது பிரிவுகளும், வழக்குகளும், சர்ச்சைகளும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளன. காதலித்துத் திருமணம் செய்து கொண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியாக சில பல வருடங்கள் சேர்ந்து வாழ்ந்தவர்கள் பிரியும் செய்திகள் வரும் போது, ஏன் இப்படி நடக்கிறது, என்று வியந்து பார்த்தவர்களும் உண்டு.
ஏஆர் ரஹ்மான் - சாயிரா பானு, தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சவுந்தர்யா ரஜினிகாந்த் - அஷ்வின் ராம்குமார், ரவி மோகன் - ஆர்த்தி, ஜிவி பிரகாஷ்குமார் - சைந்தவி, விஷ்ணு விஷால் - ரஜினி அவர்களது வரிசையில் தற்போது விஜய் - சங்கீதா பிரிவு திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில வருடங்களாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நேற்று சங்கீதா விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் இது பற்றிய பேச்சுக்கள் வரைமுறை, ஒழுக்கம், கட்டுப்பாடு இல்லாமல் கண்டபடி அவதூறாகப் போய்க் கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களை சில நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவிற்கு மாற்றி வைத்திருக்கிறார்கள் என்பது அதிர்ச்சி கலந்த உண்மை.




