பாலிவுட்டில் அடுத்த வாய்ப்பு : தாக்கு பிடிப்பாரா கீர்த்தி சுரேஷ் | ''காலம் பேசாது, காத்திருந்து பதில் சொல்லும்'': ஆதவ் அர்ஜூனா கருத்துக்கு ரஜினி 'பஞ்ச்' | சின்னத்திரை : கனிகாவிற்கு பதில் ஸ்ரீஜா | 'ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' விருதுகளை குவித்தது எப்படி? | ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் |

மலையாள நடிகை அனஸ்வரா ராஜன், தமிழில் ராங்கி, தக்ஸ் படங்களை தொடர்ந்து தற்போது திரைக்கு வந்துள்ள வித் லவ் என்ற படத்திலும் நடித்திருக்கிறார். தெலுங்கில் ரோஷன் மேகாவுக்கு ஜோடியாக சாம்பியன் என்ற படத்தில் அறிமுகமானார். அதையடுத்து தற்போது தெலுங்கில் வெங்கி கொடுமுலா என்பவர் இயக்கும் இட்லு அர்ஜுனா என்ற படத்தில் புதுமுக நடிகர் அனீசுக்கு ஜோடியாக நடித்துள்ள அனஸ்வரா ராஜன், அதையடுத்து சங்கீத் சோபன் என்பவர் நடிக்கும் இன்னொரு படத்திலும் தற்போது கமிட்டாகி உள்ளார். இந்த படத்தை சூர்யா பிரதாப் இயக்குகிறார். இதுதவிர செல்வராகவன் இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் தயாராகி வரும் 7 ஜி ரெயின்போ காலனி 2 படத்திலும் நடித்துள்ளார். அந்த வகையில் தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று தென்னிந்திய மொழி படங்களிலும் பரவலாக நடித்தபடி வேகமாக வளர்ந்து வருகிறார் அனஸ்வரா ராஜன்.