ஒரே படத்தில் நான்கு நாயகிகள் | பிளாஷ்பேக் : வில்லனுக்கு குரல் கொடுத்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் | 'ஹேப்பிராஜ்' படத்தால் ஜி.வி.பிரகாஷ் ஹேப்பி | பிளாஷ்பேக் : மூன்று முதல்வர்களை இயக்கியவர் : கே.சங்கர் நூற்றாண்டு நினைவு | அடுத்த வாரம் 'கருப்பு' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு? | கதாநாயகியும் பாடலும் இல்லாத படத்தில் ஜெய் | 'ஸ்லம்டாக் மில்லியனர்' மூலம் இப்போதும் ராயல்டி பெறும் அனில் கபூர் | ஐட்டம் டான்ஸ் ஆடி இருப்பது நிகிலா விமல் அல்ல வேதிகா ; உடைத்த சஸ்பென்ஸ் | சிம்பு படத்தில் நெல்சனுக்கு பதிலாக அஸ்வத் மாரிமுத்து | 69 வயதில் சூப்பர் ஹீரோவாக நடிக்கும் ஜாக்கி ஷெராப் |

கடந்த 2002ம் ஆண்டில் அமீர் இயக்கத்தில் சூர்யா, திரிஷா, லைலா, நந்தா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. யுவன் சங்கர் ராஜா இசையமைத்த இந்த படம் காதலர் தினத்தை ஒட்டி நாளை (பிப்ரவரி 13) ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. இதனையடுத்து நடிகர் சூர்யா, படத்தில் நடித்தபோது ஏற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
தற்போது திரிஷாவும் சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் திரிஷா கூறியிருப்பதாவது: என்னுடைய முதல் படமான மௌனம் பேசியதே நாளை ரீ- ரிலீஸ் ஆகப்போகிறது. கண்டிப்பாக எல்லோரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். காதலர் தின வாரத்தில் வெளியாவதால் இந்தப் படம் ஸ்பெஷலாக இருக்கிறது. எப்போதுமே இந்தப் படம் எனக்கு ஸ்பெஷலான படம் தான். ஏனென்றால் இந்தப் படத்தில் இருந்துதான் எனக்கு எல்லாமே துவங்கியது. என்னுடைய முதல் சினிமாவில் அமீர் உடன் பணியாற்றியது சந்தோஷமாக பார்க்கிறேன்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். என்னுடைய முதல் ரிலீஸ் சூர்யாவுடன் தான் நடந்திருக்கிறது. இப்போது என்னுடைய அடுத்த படத்தின் (கருப்பு) ரிலீஸூம் சூர்யாவுடன் தான் நடக்கிறது. இதில் இருந்து ஒரு வட்டத்திற்குள் நான் வந்துள்ளதாக நான் உணர்கிறேன். யுவன் சங்கர் ராஜாவின் இசை இன்றளவும் பாப்புலராக பேசப்படுகிறது. லைலாவுடன் பணியாற்றியதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். படத்தைப் பாருங்கள். என்ஜாய் பண்ணுங்கள். இவ்வாறு அவர் நெகிழ்ச்சியாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகை திரிஷா, நாயகியாக இந்த படத்தில் தான் அறிமுகமானார். அதேபோல், அமீர் இயக்குனராக அறிமுகமான முதல் படமும் இதுதான்.