திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
'மோகமுள், முகம், பாரதி, பெரியார், ராமானுஜன்' ஆகிய படங்களுக்குப் பிறகு ஞான ராஜசேகரன் ‛ஐந்து உணர்வுகள்' என்ற ஆந்தாலஜி படம் ஒன்றை இயக்கி முடித்துள்ளார். ஏழு வருடங்களுக்குப் பிறகு அவர் இயக்கியுள்ள படம் இது. மறைந்த பெண் எழுத்தாளரான சூடாமணி எழுதியுள்ள சிறுகதைகளைத் தேர்வு செய்து அவற்றை தனது ஆந்தாலஜி படத்தின் கதையாக வைத்துள்ளார்.
“மனித மனங்களைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் 40 வருடங்களுக்கு முன்பே அவர் எழுதியுள்ளார். பெண்களை மையமாக வைத்து ஆண், பெண் உறவு பற்றி அவர் எழுதியுள்ள ஐந்து சிறுகதைகளைத் தேர்வு செய்துள்ளேன். அந்தக் கதைகள் இந்தக் காலத்திற்கும் பொருத்தமான கதைகளாக இருக்கின்றன.
கொரோனா முதல் அலைக்குப் பிறகு இந்தப் படத்தை எடுத்து முடித்தேன். அப்போது இந்தப் படத்தில் நடிக்கத் தயாராக இருந்தவர்களைத்தான் படத்தில் நடிக்க வைத்துள்ளேன். அவர்கள் மிகவும் பிரபலமானவர்களாக இல்லை என்றாலும் சின்னத் திரையில் பிரபலமானவர்கள்.
இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இதுவரை கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமே இசையமைத்துள்ளவர் முதல் முறையாக சீரியசான ஒரு படத்திற்கு இசையமைத்துள்ளார். அவருடைய மற்றொரு பக்கம் இந்தப் படத்தில் வெளிப்படும்.
இந்தப் படத்தில் சுஜிதா, ஷ்ரேயா அன்சன், ஸ்ரீரஞ்சனி, ஷைலஜா செட்லூர், சிட்டிசன் சிவக்குமார், மணிபாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்,” என்கிறார் ஞான ராஜசேகரன். மேலும், “சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி படங்கள் பலம் வாய்ந்தவையாக இல்லை. சினிமாவில் எப்படி கதையை வைப்பார்களோ அது போலவே வைத்திருந்தார்கள். ஆனால், எனது ஆந்தாலஜி படத்தில் நான் தேர்வு செய்த கதைகளே பலம் வாய்ந்தவை,” என்கிறார்.
இந்தப் படத்தை தியேட்டர்களில் வெளியிடும் ஆசையில் இருக்கிறார் ஞான ராஜசேகரன்.