பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரணவத் தலைவி படத்தை அடுத்து சீதா படத்தில் சீதாவாக நடிக்க உள்ளார். அலாகிக் தேசாய் இயக்க உள்ள இந்தப் படத்திற்கு பாகுபலி, தலைவி படங்களுக்கு திரைக்கதையை எழுதிய விஜயேந்திர பிரசாத் திரைக்கதை எழுதுகிறார். உடன் படத்தின் இயக்குனர் அலாகிக்கும் எழுதுகிறார்.
இந்தப் படத்தில் முதலில் சீதா கதாபாத்திரத்தில் கரீனா கபூர் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால், அவர் 12 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாகத் தகவல் வெளியாகி பரபரப்பானது. இப்போது கங்கனா நடிக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
மணிகர்ணிகா, தலைவி படங்களுக்குப் பிறகு ஒரு பவர்புல்லான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் கங்கனா. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.