தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் | 'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் | அனுபமாவின் அனுபவம் | 59 நாட்களில் தமிழ் கற்றேன்: ‛செம்பருத்தி பூ' ஸ்வாதி | நான் ஏன் பிறந்தேன், முத்து, மார்கன் - ஞாயிறு திரைப்படங்கள் | மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் |

‛பருத்திவீரன்' ப்ரியாமணி திருமணத்திற்கு பிறகும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பரவலாக நடித்து வருகிறார். தற்போது தமிழில் விஜயின் ‛ஜனநாயகன்' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருப்பவர், தெலுங்கில் ‛சரஸ்வதி' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில் தனது சம்பளம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.
அதில், ‛‛எப்போதுமே பிரபலங்கள் தங்களது மார்க்கெட் அடிப்படையில் சம்பளம் கேட்பார்கள். இது நியாயமான ஒன்றுதான். என்னை பொருத்தவரை எனது தகுதிக்கு உரிய சம்பளத்தை கேட்கிறேன். அதை மீறி நான் கேட்பதில்லை. என்னுடைய தற்போதைய மதிப்பு என்னவென்று எனக்கு தெரியும். அதற்கு உரிய சம்பளத்தை கேட்பதற்கு நான் தயங்குவதில்லை. குறைவாக கொடுத்தாலும் நான் ஏற்பதில்லை என்கிறார்'' பிரியாமணி.