ரூ.152 கோடி வசூலை கடந்த தனுஷின் தேரே இஸ்க் மே படம் | 3 இடியட்ஸ் 2வது பாகத்தின் பணியில் ராஜ்குமார் ஹிரானி | சினிமாவாகிறது தமிழக கேரம் சாம்பியன் காஜிமா வாழ்க்கை | ரஜினிகாந்த் 75வது பிறந்தநாள் கொண்டாட்டம் : புது அறிவிப்புகள் உண்டா | மார்பிங் புகைப்படம் : சைபர் கிரைமில் புகார் அளித்த பாடகி சின்மயி | பிரபாஸின் ஸ்பிரிட் படத்தில் இணைந்த அனிமல் பட நடிகர் | ஒரே படத்தில் உயர்ந்த சாரா அர்ஜுன் சம்பளம் | 'காந்தா' முதல்..... காதல் காவியம் 'ஆரோமலே' வரை இந்த வார ரிலீஸ்...! | தமிழ் சினிமாவுக்கு என்னாச்சு? அடுத்தடுத்து ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி, விஜயகாந்த் இணைந்த படம் |

மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வந்துள்ள படம் ‛பைசன்'. இந்த படம் இதுவரை உலக அளவில் 50 கோடி வசூலை நெருங்கியுள்ளது. இந்த நிலையில் நேற்று பைசன் படத்தின் வெற்றி விழா நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், ‛‛எனது படம் என்றாலே சாதியை பற்றியதாகத்தான் இருக்கும் என்று அது குறித்து என்னிடத்தில் அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். அப்படி யாரும் என்னிடத்தில் கேள்வி கேட்காதீர்கள். அது என்னை ரொம்பவே பாதிக்கிறது. நீங்கள் கேள்வி கேட்பதில் உங்களுக்கும் எனக்கும் இடையே முரண்பாடு வந்து விடக்கூடாது என்று நினைக்கிறேன்.
அப்படி கேட்டால் நான் இன்னும் அதிகமாக வேலை செய்வேன். ஆனால் உங்களை நிராகரித்து விடுவேன். குறிப்பாக என்னுடைய கலையை, அரசியலை யாராவது பிடுங்க முயற்சித்தால் அவர்களை எதிர்த்து மூர்க்கமாக போராடுவேன். அதனால் அதுபோன்ற கேள்விகளை தவிர்த்து விடுங்கள்'' என்று கூறிய மாரி செல்வராஜ், ‛‛நான் எடுப்பது சாதி படம் என்றால் அது உங்களுடைய மொழி. ஆனால் என்னை பொருத்தவரை நான் எடுப்பது சாதியை எதிர்க்கும் படம். இதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன். அதோடு உங்களை மகிழ்ச்சிப்படுத்தக் கூடிய 300 படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்னை அந்த கூட்டத்துக்குள் தள்ள முயற்சி செய்யாதீர்கள்'' என்று கேட்டுக்கொண்டார் மாரி செல்வராஜ்.