சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் |

'கற்க கசடற' படத்தின் மூலம் அறிமுகமாகி ஏராளமான படங்களில் நடித்தவர் ராய் லட்சுமி. கவர்ச்சி நடிகை என்ற அடையாளத்தில் சிக்கியதால் போதிய வாய்ப்புகள் இன்றி சொந்த ஊருக்கே திரும்பினார்.
கடைசியாக 4 ஆண்டுகளுக்கு முன்பு வந்த 'சிண்ட்ரெல்லா' என்ற படத்தில் நடித்தார். அதன்பிறகு தற்போது அவர் நடித்துள்ள தெலுங்கு படமான 'ஜனதா பார்' படத்தின் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.
இதில் அமன் ப்ரீத் சிங், தீக்ஷா பந்த், சக்தி கபூர், அனுப் சோனி, பிரதீப் ராவத் மற்றும் சுரேஷ் பூபால் ஆகியோரும் நடித்துள்ளனர். பாடல்களுக்கு ராம்பாபு கோசாலா, கல்யாண் சக்ரவர்த்தி மற்றும் ஸ்ரீனிவாஸ் தேஜா ஆகியோர் இசையமைத்துள்ளனர். சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் வருகிற 28ம் தேதி தமிழ், தெலுங்கில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தை ரோச்சி மூவிஸ் பேனரின் கீழ் ரமணா மோகிலி இயக்கி, தயாரித்துள்ளார்
படம் குறித்து அவர் கூறும் போது, “விளையாட்டை ஒரு தொழிலாகத் தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு எதிராக தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தும் விளையாட்டுத் துறையின் மூத்த அதிகாரிகளால் நிகழ்த்தப்படும் பாலியல் துன்புறுத்தலை முடிவுக்குக் கொண்டுவர போராடிய ஒரு பெண்ணின் கதை இது.
படத்தில் ராய் லட்சுமியின் பாத்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. வணிகக் கூறுகளுடன், இந்தப் படம் ஒரு வலுவான சமூக செய்தியைக் கொண்டுள்ளது மற்றும் பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாலிவுட் நடிகர் சக்தி கபூர் இந்தப் படத்தில் மிகவும் சக்திவாய்ந்த வேடத்தில் நடித்துள்ளார்" என்றார்.