நான் கொடூரக்கோலத்தில் இருந்தாலும் என் கணவர் ரசிப்பார்..! கீர்த்தி சுரேஷ் ‛ஓபன்டாக்' | நிஜ போலீஸ் டூ 'பேட்பெல்லோ' வில்லன்: கராத்தே கார்த்தியின் கதை | ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் |

ஆமீர்கான் தயாரிப்பு மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற “சித்தாரே ஜமீன் பர்” படத்தை, நேரடியாக யு-டியூபில் வெளியிடுகிறார். ஒரு பாலிவுட் படம் நேரடியாக யு-டியூபில் வெளியிடப்படுவது இதுவே முதன் முறை. அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் இணைந்து நடித்துள்ள இந்த படத்தை 100 ரூபாய் கட்டணம் செலுத்தி பார்க்கலாம். மற்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அந்தந்த நாட்டின் சந்தைக்கேற்ற கட்டணத்திலும் பார்க்கலாம் என்றும் வேறு எந்த தளத்திலும் இந்த படத்தை காண முடியாது என்றும் அறிவித்துள்ளார்.
உலகளவில் 250 கோடி வசூலைக் குவித்து சாதனை படைத்த இந்த படம் யு டியூபில் வெளியிடப்படுவது குறித்து பலர் அதிர்ச்சி அடைந்தாலும், இது சினிமா வியாபாரத்தின் அடுத்த கட்டம் என்கிறார்கள். இந்த படத்தை பார்க்க தேவை இணைய இணைப்பு மட்டுமே. திரையரங்குகளில் தவறவிட்ட அல்லது மீண்டும் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு, இது பயனுள்ளதாக இருக்கும் என்கிறார்கள்.
இது குறித்து நடிகர்-தயாரிப்பாளர் அமீர் கான் கூறியிருப்பதாவது : கடந்த 15 ஆண்டுகளாக திரையரங்குகளுக்கு வராத பார்வையாளர்களை அல்லது பல்வேறு காரணங்களுக்காக திரையரங்குகளுக்குள் நுழைய முடியாதவர்களை எவ்வாறு சென்றடைவது என்ற சவாலில் நான் போராடி வருகிறேன்.
இறுதியாக அதற்கு மிகச்சரியான நேரம் வந்துவிட்டது. மின்னணு கட்டணங்களில் இந்தியா உலகில் முதலிடத்தைப் பிடித்தது. இந்தியாவில் இணைய ஊடுருவல் வியத்தகு முறையில் வளர்ந்து வருகிறது, மேலும் பெரும்பாலான சாதனங்களில் யு டியூப் இருப்பதால், இந்தியாவில் பரந்த அளவிலான மக்களையும், உலகின் ஒரு குறிப்பிடத்தக்க பகுதியையும் நாம் இறுதியாக சென்றடைய முடியும்.
சினிமா அனைவருக்கும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும் என்பதே எனது கனவு. மக்கள் எப்போது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும் சினிமாவைப் பார்ப்பதற்கான வசதி கிடைக்க வேண்டுமென நான் விரும்புகிறேன். இந்த யோசனை வெற்றி பெற்றால், புவியியல் மற்றும் பிற தடைகளைத் தாண்டி படைப்பாற்றல் மிக்க வெவ்வேறு கதைகளைச் சொல்ல முடியும். சினிமா துறையில் நுழையும் இளைய படைப்பாளிகளுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகவும் இருக்கும். இதை அனைவருக்குமான வெற்றியாக நான் பார்க்கிறேன் என்கிறார்.