பிளாஷ்பேக்: பி யு சின்னப்பா திரைப்படத்தில் பிரியமுடன் எம் ஜி ஆருக்கு வாய்ப்பளித்த இயக்குநர் கிருஷ்ணன் | ஏப்ரல் 10 கருப்பு ரிலீசா... : ஆர்.ஜே பாலாஜி தந்த அப்டேட் | மீண்டும் ஆஸ்கர் மேடையில் பிரியங்கா சோப்ரா | விடியலாக முழு வீடியோ வரும் : திரிஷாவுக்கு வாழ்த்துகள் கூறி பார்த்திபன் சஸ்பென்ஸ் | என் மீது திட்டமிட்டு தாக்குதல் : பிரியங்கா மோகன் | சம்பளத்தை குறைக்காத அஜித்: இன்னமும் சிக்காத தயாரிப்பாளர்கள் | மீடியாவை சந்தித்து பேசுகிறார் சங்கீதா? | 10 நாளில் 50 கோடி வசூலித்த ‛தாய் கிழவி' | சன்னி தியோலின் லாகூர் 1947 பட டைட்டில் மாற்றம் ? | தலைவா படத்தில் பிரச்னைக்குரிய வார்த்தைகளை சேர்த்தது யார்? : சஸ்பென்ஸ் உடைத்த இயக்குனர் விஜய் |

மோகித் சூரி இயக்கத்தில், அஹான் பான்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகி 400 கோடி வசூலைக் கடந்த ஹிந்திப் படம் 'சாயரா'. இப்படத்தின் மொத்த பட்ஜெட் 50 கோடி மட்டும்தானாம். ஆனால், அந்த 50 கோடியை படத்தின் இசை உரிமையை விற்றதன் மூலம் மட்டுமே திரும்பப் பெற்றுவிட்டார்களாம். இப்படத்தின் பாடல்களுக்கு 7 இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ளார்கள். பின்னணி இசையை வேறொரு இசையமைப்பாளர் கொடுத்திருக்கிறார்.
இப்படத்தின் பாடல்களும் ஹிட்டாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளன. 80, 90களில் சில புதுமுகங்கள் நடித்த படங்கள் இப்படி ஹிட்டாகி ரசிகர்களைக் கவர்ந்தது போல இப்போது இப்படத்தின் வெற்றி நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். இப்படத்தின் டிரைலர் மட்டுமே 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. எப்படியும் 500 கோடி வசூலை படம் கடப்பது உறுதி என்கிறார்கள். இசை உரிமையிலேயே படத்தின் பட்ஜெட்டை எடுத்துவிட்டதால், தியேட்டர் வருவாய் மூலம் கிடைக்கும் அத்தனை பணமும் லாபக் கணக்கில் மட்டுமே சேரும். ஓடிடி, சாட்டிலைட் உரிமை, இதர உரிமைகள் என அனைத்துமே கூடுதல் லாபம்தான்.