'தேவரா' டிரைலர்: பான் இந்தியாக்கு 'செட்' ஆகுமா? | சின்னத்திரையில் இனி நடிக்கமாட்டேன்! பிரியங்கா அதிரடி | 13 வருட காதல்! காதலியை கரம்பிடித்த அவினாஷ் | ஹிந்திக்கு செல்லும் வேட்டையன் இயக்குனர் ஞானவேல் : என்ன கதை தெரியுமா? | ஆந்திரா, தெலங்கானா வெள்ளத்திற்கு சிம்பு நிதியுதவி | மலையாளத்திலிருந்து இறக்குமதியான 'மனசிலாயோ, தாவூதி' பாடல்கள்... - அனிருத் சம்பவம் | இறுதிக் கட்டத்தை நெருங்கிய தக் லைப் | நஷ்டத்தை சரி செய்ய ரவி தேஜா எடுத்த அதிரடி முடிவு | செப்.,21ல் வெளியாகும் ‛பிரதர்' பட இசை, டீசர் வெளியீட்டு விழா | விஜய் படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் பிரசாந்த்? |
தமிழ் சினிமாவில் எந்த சங்கப் பொறுப்பிலும் இல்லாமல் போனதால் விஷால் தற்போது அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். ஏற்கெனவே ஆனந்த் சங்கர் இயக்கத்தில் 'எனிமி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
தற்போது அறிமுக இயக்குனர் சரவணன் இயக்கத்தில் 'வீரமே வாகை சூடும்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் ஆரம்பமானது. ஐதராபாத்தில் தொடர்ச்சியாக படப்பிடிப்புகளை நடத்தினார்கள். இப்போது படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பமாவதாக விஷால் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்திற்குப் பிறகு அறிமுக இயக்குனர் வினோத்குமார் இயக்கும் தன்னுடைய 32வது படத்திலும் தொடர்ந்து நடிக்க உள்ளார் விஷால். இப்படத்தின் பூஜை விஷால் பிறந்தநாளான கடந்த மாதம் ஆகஸ்ட் 29ம் தேதியன்று நடைபெற்றது.
ஒரு படத்தை முடிக்கும் தருவாயில் அடுத்து ஒரு புதிய படத்தை ஆரம்பிக்கும் முறையை கடைபிடிக்க ஆரம்பித்துவிட்டார் விஷால். 'எனிமி, வீரமே வாகை சூடும், விஷால் 32' என அடுத்தடுத்து விஷால் படங்கள் வெளியாக உள்ளன.