'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா | கூட்ட நெரிசலால் கேன்சல் செய்யப்பட்ட ரேப்பர் வேடன் இசை நிகழ்ச்சி : ரயில் விபத்தில் பலியான ரசிகர் | 2025 தமிழ் சினிமா ஒரு ரீ-வைண்ட் | ஜன.3ல் 'பராசக்தி' பாடல் வெளியீட்டு விழா: அதிகாரப்பூர்வ அறிவிப்பு |

விஷாலின் படத்தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிர்வாகியாகவும், புரட்சித் தளபதி விஷால் மக்கள் நல இயக்கத்தின் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வந்தவர் ஹரிகிருஷ்ணன்.
விஷாலுக்கு வலது கரம் போன்று நெருக்கமாக இருந்த இவரை தற்போது அவர் மேலாளர் பொறுப்பில் இருந்தும், ரசிகர் மன்ற பொறுப்பில் இருந்தும் நீக்கி உள்ளார். இதுதொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்புடையீர் வணக்கம், நான் இந்தக் கடிதத்தின் வாயிலாக தங்களுக்கு அனைவருக்கும் தெரிவிப்பது, வ.ஹரிகிருஷ்ணன் அவர்கள் எனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம், தேவி சமூக சேவை அறக்கட்டளை மற்றும் நமது விஷால் மக்கள் நல இயக்கம் ஆகியவற்றுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தத் வகையிலும் தொடர்புடையவர் அல்ல.
பொதுமக்கள், திரைத்துறை நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் என் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் வ.ஹரிகிருஷ்ணனைத் தொடர்பு கொள்ளவோ அல்லது கையாளவோ வேண்டாம் என்று இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் தகவல்கள் ஏதேனும் இருந்தால், உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.