'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா | 'சேயோன்' படத்தில் பாக்ய ஸ்ரீ போர்ஸ்! | 'கோ, திருவிளையாடல் ஆரம்பம்' படங்களை மிஸ் செய்த வருத்தம் உள்ளது - நடிகர் பரத் |

அமெரிக்கா, இஸ்ரேல், ஈரான் இடையே கடும் போர் நிகழ்ந்து வருகிறது. ஈரான், துபாயில் இருக்கும் அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும், விமான நிலையங்கள், நட்சத்திர ஓட்டல்கள் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. துபாய் சிறிய நாடு என்பதால் எல்லாமே அருகருகே இருப்பதால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியர்கள் பலர் இதில் சிக்கி உள்ளனர். இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து, துபாய் விமான நிலையத்தில் சிக்கி உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை சோனல் சவுகான் தன்னை காப்பாற்றுமாறு பிரதமருக்கு மெயில் அனுப்பி உள்ளார்.
நடிகர் அஜித், கார் பந்தய முன் தயாரிப்பு, மற்றும் பயிற்சிக்காக தற்போது துபாயில் தங்கி உள்ளார். இதனால் அஜித்தின் பாதுகாப்பு குறித்து ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் கேள்வி கேட்டு வந்தனர். இதையடுத்து நேற்று அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கம் அளித்துள்ளார். துபாயில் அஜித் பாதுகாப்பாகவும், நலமாகவும் இருப்பதாக அந்த விளக்கத்தில் அவர் கூறியுள்ளார்.




