'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே? | ஹரிஷ் கல்யாண் மகளின் பெயர் 'கிரியா ஹரிஷ்' | விஜய் பெரிய ஸ்டார், அறிவுரை தேவையில்லை : பவன் கல்யாண் | விமர்சனம் வந்தால் வளருகிறீர்கள் என அர்த்தம் : மாளவிகா மோகனன் | அண்ணன், தம்பியை இயக்கும் வினோத் | ஏஜிஎஸ் படத்தில் சாய் அபயங்கர் : இசையா.... ஹீரோவா... | சூரியின் மண்டாடி படத்தை கைப்பற்றிய நெட்பிளிக்ஸ் | அஜித் பிறந்தநாளில் ‛ஆழ்வார்' ரீ ரிலீஸ்? | பிரபல அமெரிக்க நிறுவனத்தின் முதல் இந்திய விளம்பர தூதராக பொறுப்பேற்ற 'அனிமல்' பட நடிகை | கோவையில் கேபிள் டிவியில் ‛ஜனநாயகன்' படம் ஒளிபரப்பு : ஒருவர் கைது |

மலையாளத்தில் 2024ம் ஆண்டு வெளிவந்து 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மாபெரும் வெற்றி பெற்ற படம் 'மஞ்சும்மல் பாய்ஸ்'. அப்படத்தை சிதம்பரம் என்ற இளம் இயக்குனர் இயக்கியிருந்தார். தமிழகத்திலும் அந்தப் படம் வெற்றிகரமாக ஓடியது.
கொடைக்கானலில் உள்ள 'குணா குகை' என்றழைக்கப்படும் இடத்தில்தான் அந்தப் படத்தின் களம் அமைக்கப்பட்டிருந்தது. அப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியிருந்தார் நடிகர் கமல்ஹாசன். அப்படம் சம்பந்தப்பட்ட அனைவருமே படத்திற்காக வெகுவாகப் பாராட்டப்பட்டார்கள்.
அப்படத்தின் இயக்குனர் சிதம்பரம் மீது நேற்று கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பெண் ஒருவர் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். 2022ம் ஆண்டு தனது அடுக்குமாடி குடியிருப்பில் அத்து மீறி நுழைந்து தகாத நடத்தையில் சிதம்பரம் ஈடுபட்டதாக அந்தப் பெண் அவரது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 74 மற்றும் 75 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்து எர்ணாகுளம் தெற்கு போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளார்கள்.




