புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

'முந்தானை முடிச்சு' படத்தில் ஊர்வசியின் நண்பர்களில் ஒருவராக வரும் தவக்களையை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. அவரின் குறும்பை இப்போது நினைத்தாலும் சிரிக்க வைக்கும்.
தவக்களையின் இயற்பெயர் சிட்டிபாபு. தாய் சுப்புலட்சுமி, தந்தை விஜயகுமார். தந்தை ஒரு துணை நடிகராக இருந்ததால், தமிழ் சினிமாவில், 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் அறிமுகம் ஆனார். கே.பாக்யராஜை சந்தித்து வாய்ப்பு கேட்டார். சிட்டிபாபுவின் தோற்றத்திற்காகவே முந்தானை முடிச்சு படத்தில் நடிக்க வைத்தார்.
ஒரு நாள் சிட்டிபாபு தூங்குவதை பார்த்த கே.பாக்யராஜ் அவரது தோற்றம் தவக்களை போன்று இருப்பதால் படத்தில் ஊர்வசி அவரை தவக்களை என்று கிண்டலாக அழைப்பது போன்று காட்சிகள் அமைத்தார். படம் பெரிய ஹிட்டானதால் சிட்டிபாபு என்ற இயற்பெயர் மறைந்து தவக்களை என்ற பெயரே நிலைத்தது.
இதனைத்தொடர்ந்து, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில், அமிதாப் பச்சன், மோகன்லால், பாலகிருஷ்ணா, போன்ற நடிகர்களுடன் நடித்தார். தமிழில் காக்கிச் சட்டை, ஆண் பாவம், நல்ல பாம்பு, மதுரை சூரன், ஓசை, என் இரத்தத்தின் இரத்தமே, நீங்கள் கேட்டவை, தங்கமடி தங்கம், 'நாலு பேருக்கு நன்றி, பொண்ணு பிடிச்சிருக்கு, நேரம் நல்ல நேரம், மணந்தால் மகாதேவன் ஆகியவை உள்பட சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்
கடைசியாக மலையாள இயக்குநர் வினயன் இயக்கிய 'அற்புதத் தீவு' படத்தில் நடித்திருந்தார். 'பைரவி' உள்ளிட்ட சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததோடு, நூற்றுக்கணக்கான படங்களுக்கு டப்பிங்கும் பேசியுள்ளார். சிட்டிபாபு அடிப்படையில் நடன கலைஞர் என்பதால் நடன பள்ளிகளும், நடன குழுக்களையும் நடத்தி வந்தார்
எல்லா நடிகரையும்போல சிட்டிபாபுவிற்கும் படம் தயாரிக்கும் ஆசை வந்தது. 'மண்ணில் இந்த காதல்' என்ற படத்தை தயாரித்தார். இதனால் பெரும் கடன் சுமைக்கு ஆளானார். அந்த படமும் வெளிவரவில்லை. இதனால் மனசும், உடலும் தளர்ந்து போகவே தனது 42வது வயதில் காலமானார்.




