பிளஷ்பேக் : 2 வண்ண தொழில்நுட்பத்தில் தயாரான அதிசயப்பெண் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | 'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை | என் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த் ; பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் | மகா காலேஸ்வரர் கோவிலில் தரிசனம் செய்த சாரா அர்ஜுன் | மலையாள சைக்காலஜிக்கல் திரில்லர் படத்தில் நடிக்கும் சுஹாசினி | 25 வருடங்களுக்குப் பிறகு ஹவுஸ்புல் காட்சிகளுடன் ரீ ரிலீஸான விஷ்ணுவர்தனின் 'கோடிகோபா' | ஆஷா போஸ்லே மறைவு; அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை இரங்கல் | என்டிஆர், நீல் படத்தில் பிரபல பாலிவுட் நடிகர்! | மாதவிடாய் பெரிய பிரச்னையாக ஆக இருக்க கூடாது! - நடிகை ஸ்ரீ லீலா |

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் ரீ ரிலீஸ் படங்கள் என்பது ஒரு டிரெண்டாகவே இருந்தது. விஜய், அஜித் ஆகியோரது படங்கள் ரீ ரிலீஸ் ஆகி அவை சில கோடிகளை வசூலித்தும் தந்தது.
இந்த வருடத்தில் முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவராத காரணத்தால் வாராவாரம் ரீ ரிலீஸ் படங்களை வெளியிட ஆரம்பித்தார்கள். கடந்த வாரம் விஜய் நடித்த 'தெறி' படத்தை ரீ ரிலீஸ் செய்தார்கள். ஆனால், புதிய படமாக வெளிவந்த 'தாய் கிழவி' படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு இருந்தது.
மேலும், கடந்த வாரம் விஜய் மீது அவரது மனைவி விவகாரத்து கோரி மனு தாக்கல் செய்திகளும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனாலும், 'தெறி' படத்தைப் பார்க்க விஜய் ரசிகர்களே முன்வரவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கெனவே சில புதிய படத் தயாரிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால் 'தெறி' படத்தின் ரீ ரிலீஸைத் தள்ளி வைத்தார்கள். அப்படி தள்ளி வைத்தும் தவறான ஒரு காலகட்டத்தில் படம் வந்ததால் வசூலைப் பெற முடியாமல் போய்விட்டது.




