Advertisement

சிறப்புச்செய்திகள்

வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: எஸ்.பி.பாலசுப்ரமணியனை தனக்கு பாட வைத்த சிவாஜி

02 மார், 2026 - 11:39 IST
எழுத்தின் அளவு:
Flashback-Sivaji-made-S.P.-Balasubramanian-sing-for-him
Advertisement


எம்.ஜி.ஆர். மற்றும் சிவாஜிக்கு டி.எம்.சவுந்தர்ராஜன்தான் அதிகம் பாடி வந்தார். இந்நிலையில்தான் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சினிமாவில் அறிமுகமாகிறார். ஆரம்பத்தில் “உன் உச்சரிப்பில் தெலுங்கு வாடை அடிக்கிறது. நன்றாக தமிழ் கற்றுக்கொண்டு வா” என்று எம்.எஸ்.விஸ்வநாதன் திருப்பி அனுப்பி விட்டார்.

பின்னர் மேடைகளில் பாடி தனது தமிழ் உச்சரிப்பை சரியாக்கிக் கொண்டு மீண்டும் வாய்ப்பு கேட்க வந்தபோது கே.வி.மகாதேவன் இசையில் 'அடிமைப்பெண்' படத்தின் பாடல் பதிவு நடந்து கொண்டிருந்தது. அப்போது டி.எம்.சவுந்தர்ராஜன் பாட வேண்டிய 'ஆயிரம் நிலவே' பாடலுக்கு டிராக் பாடச் சொன்னார். பாடலை கேட்ட மிரண்டு விட்டார். அதை எம்ஜிஆருக்கு அனுப்பி வைத்தார் அதை கேட்ட எம்ஜிஆர் அந்த பையனையே பாட வையுங்கள் என்று கூறிவிட்டார்.

பாடல் ஹிட்டானது. மேலும் சில பாடல்களை எம்ஜிஆருக்கு பாடினார் பாலு. இந்த பாடல்களை கேட்ட சிவாஜி யார் இந்த பையன் என்று கேட்டு பாலுவை அன்னை இல்லத்திற்கு அழைத்து வரச் சொன்னார். எம்ஜிஆருக்கு பாடுகிற மாதிரி என் படத்திலும் பாட வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார், உடனே எம்.எஸ்.விஸ்வநாதனை அழைத்து எனது அடுத்த படத்தில் அந்த பையன் பாட வேண்டும் என்று கூறிவிட்டார்.

சி.வி.ராஜேந்திரன் இயக்கிய 'சுமதி என் சுந்தரி' படத்தில், சிவாஜிக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாக, பாடல் பதிவுக்கு வராத சிவாஜி, அன்று ஸ்டுடியோவுக்கு வந்ததைப் பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். சிவாஜி, பாலுவை ஒரு தனி அறைக்கு அழைத்துச் சென்று, "எனக்காக உன் பாணி மாற வேண்டும் என்று யாராவது சொல்லி குழப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கே வந்தேன். நீ உன் பாணியில் பாடு. அதற்கேற்றபடி நான் நடித்துக் கொள்கிறேன்" என்று கூறினார். சிவாஜியின் இந்த வார்த்தைகள் பாலுவுக்குப் பெரிய தைரியத்தையும், நம்பிக்கையையும் கொடுத்தன.

பின்னர், எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், பி.சுசீலாவும் சேர்ந்து 'பொட்டு வைத்த முகமோ' பாடலைப் பாடினர். 1971 ஏப்ரல் 14ம் தேதி வெளியான 'சுமதி என் சுந்தரி' பெரும் வெற்றி பெற்றது. படத்தின் பாடல் காட்சியில், பாலுவின் பாட்டுக்கு ஏற்ப சிவாஜி தனது நடிப்பை மாற்றியதைக் கண்டு பிரமித்துப் போனார்கள் ரசிகர்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மார்ச் 4ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமண வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்மார்ச் 4ல் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ... ரீ ரிலீஸில் ஏமாற்றிய விஜய்யின் 'தெறி' ரீ ரிலீஸில் ஏமாற்றிய விஜய்யின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap