2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் | சென்னை பெரம்பூர் பின்னணி கதையில் ரோஜா |

கடந்த பிப்ரவரி மாதம் வெளியான 'மஞ்சும் பாய்ஸ்' படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. 20 கோடி செலவில் தயாரான இந்தப்படம் 242 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்தப் படத்தின் நாயகனான சவுபின் சாஹிர் தான் இதன் முக்கிய தயாரிப்பாளர் ஆவார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் லாபம் மூலம் ஏராளமாக கருப்புப் பணம் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், வருமானத்திற்கு ஏற்ப வரி கட்டாமல் மோசடி செய்துள்ளதாகவும் வருமான வரித்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சியிலுள்ள சவுபின் சாஹிரின் படத் தயாரிப்பு நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனை நள்ளிரவு வரை நீடித்தது. தொடர்ந்து நேற்றும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த படத்தின் மூலம் 148 கோடி வருமானம் கிடைத்ததாக கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு ஏற்ப வரி கட்டவில்லை. இந்தப் படத்தில் பல கோடிக்கு கருப்புப் பணம் முதலீடு செய்ததற்கான முக்கிய ஆவணங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும் சுமார் 60 கோடிக்கு வரி ஏய்ப்பு செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது . இதைத்தொடர்ந்து தயாரிப்பாளர் சவுபின் சாஹிரிடம் வருமான வரித்துறையினர் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.