சாய் பல்லவியின் ‛ஏக் தீன்' ஹிந்தி படம் டீசருடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு | சிறிய படங்களை கண்டு கொள்ளாத ஓடிடி நிறுவனங்கள் : வசந்தபாலன் காட்டம் | பாலிவுட்டில் பரவும் தனுஷ், மிருணாள் தாகூர் திருமணத் தகவல் | கமலை சந்தித்து ஆசி வாங்கிய ஊர்வசியின் மகள் | திரிஷ்யம் 3 படத்துடன் மோதும் வாழ 2 | மரகத நாணயம் 2 படத்தில் பிரியா பவானி சங்கர் | விஜய் படம் எப்ப ரிலீஸ் : அஜித் படம் அறிவிப்பு எப்ப வரும் | தலைப்பு ‛தி மம்மி ரிட்டர்ன்ஸ்' : ஆனா பேய் படமில்லையாம் | விஜய் சேதுபதி கைவசம் வரிசை கட்டும் படங்கள் | பொங்கல் படங்களில் வின்னர் எது? : 100கோடியை தாண்டுமா பராசக்தி |

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் இணைந்து நடித்துள்ள படம் 'பராசக்தி'. 1965 காலகட்டத்தில் ஹிந்தி திணிப்பு போராட்டம் குறித்து இப்படம் உருவாகிறது. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். 2026ம் ஆண்டில் ஜனவரி 14ம் தேதியன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது. சமீபத்தில் இந்த படத்திலிருந்து இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ளது. இப்போது மூன்றாவது பாடல் டிசம்பர் மூன்றாவது வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை முதலில் சென்னையில் திட்டமிட்டிருந்தனர். தற்போது ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை திருச்சி அல்லது மதுரை அங்கு கிடைக்கும் இடத்தை பொறுத்து நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.