‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' | 'தங்கலான், கங்குவா' படங்களைத் தொடர்ந்து 'வா வாத்தியார்' படத்திற்கும் சிக்கல் |

'கனா காணும் காலங்கள்' வெப் தொடரின் மூலம் பிரபலமான நடிகர் ஏகன். அதன் பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் 'கோழிப்பண்ணை செல்லத்துரை' படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதையடுத்து ஆஹா கல்யாணம் வெப் தொடரை இயக்கிய யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் ஏகன் புதிய படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். தற்போது இந்த படத்திற்கு 'ஹைக்கூ' என தலைப்பு வைத்துள்ளதாக முதல் பார்வை போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.
இந்த படத்தில் கதாநாயகிகளாக கோர்ட் படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீதேவி அப்பல்லா மற்றும் மின்னல் முரளி படத்தின் மூலம் பிரபலமான பெமினா ஜார்ஜ் ஆகிய இருவரும் நடிக்கின்றனர். ஜோ படத்தை தயாரித்த விசன் சினிமா ஹவுஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். ஏற்கனவே சூர்யா, பாண்டிராஜ் கூட்டணியில் வெளிவந்த 'பசங்க 2' படத்திற்கு முதலில் ஹைக்கூ என தலைப்பு வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.




