'காந்தாரா' கதாநாயகியை 'அன்பாலோ' செய்த ரிஷப் ஷெட்டி | ஜூலை மாதத்திற்குத் தள்ளிப் போன 'ஜனநாயகன்' ரிலீஸ்? | சமூக வலைத்தளங்களில் வைரலாகும் கியாரா அத்வானி | ராம் சரணின் 41வது பிறந்தநாளில் 10 லட்சம் நன்கொடை வழங்கிய சிரஞ்சீவி | அஜித் உடன் நடித்தது மறக்க முடியாத தருணம் என்கிறார் ரெஜினா | நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா | சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள் | தமிழ் சினிமாவின் 3 மாதங்கள்…. வசூல் 300 கோடி மட்டுமே…. | இயக்குனர் மணிகண்டன் ஏன் பேசவில்லை | கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் |

2007ம் ஆண்டில் அஜித், திரிஷா நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கிய படம் கிரீடம். இந்த படத்தில் தான் அவர் இயக்குனராக அறிமுகமானார். அதன்பிறகு அஜித் குமாரை வைத்து அவர் படம் இயக்கவில்லை. அஜித் தற்போது பல்வேறு நாடுகளில் நடைபெற்று வரும் கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் 2025ம் ஆண்டுக்கான ஜென்டில்மேன் டிரைவர் விருது பெற்றார். இந்த நிலையில் தற்போது மலேசியாவில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நேரத்தில் அஜித்தின் கார் ரேஸ் பயணங்களை தொகுத்து ஒரு ஆவண படத்தை உருவாக்கி வருகிறார் ஏ.எல்.விஜய். அஜித்தின் ஹைலைட்டான கார் ரேஸ் காட்சிகள் இடம்பெறும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.