டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி |
தெலுங்கு இளம் முன்னணி நடிகர் நாகசைதன்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் விதமாக உருவாகி வரும் படம் 'தண்டேல்'. கதாநாயகியாக சாய்பல்லவி நடித்து வரும் இந்த படத்தை கார்த்திகேயா-2 புகழ் இயக்குனர் சந்து மொண்டேட்டி இயக்கி வருகிறார். அல்லு அர்ஜுனின் தந்தை அல்லு அரவிந்த் இந்த படத்தை தயாரித்து வருகிறார். கடற்கரையோர கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தில் நாகசைதன்யா ஒரு மீனவர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மீன் பிடிப்பதற்காக கடலுக்கு செல்லும் நாகசைதன்யா எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்து விட, அதன் பின் நடக்கும் விஷயங்களை வைத்து விறுவிறுப்பாக இந்த படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் நாகசைதன்யா, சாய்பல்லவி இருவரும் ஆயிரம் நடன கலைஞர்களுடன் ஆடிப்பாடும் விதமாக 'மகா சிவராத்திரி' பாடல் ஒன்று சமீபத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடலை படமாக்குவதற்கு மட்டும் சுமார் ரூ.4 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். படக்குழுவினர் இந்த பாடல் குறித்து கூறும்போது, “நாகசைதன்யா, சாய்பல்லவி ஆகியோரின் பிரமிக்கும் நடனத்தில் தேவி ஸ்ரீ பிரசாத்தின் அற்புதமான இசையில் இந்த பாடல் மிக ஸ்பெஷலானதாக இருக்கும். அது மட்டுமல்ல நீண்ட காலத்திற்கு இந்த பாடல் நினைவில் வைத்துக் கொள்ளப்படும்” என்று கூறியுள்ளனர்.