பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

இயக்குனர் ஆனந்த் எல் ராய், நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் ஆகியோரின் கூட்டணியில் மூன்றாவது முறையாக ஹிந்தியில் உருவாகி உள்ள படம் ‛தேரே இஷ்க் மெயின்'. கிர்த்தி சனோன் நாயகியாக நடித்துள்ளார். முழுக்க முழுக்க காதல் கதையில் இப்படம் உருவாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இதன் பாடல் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.
முன்னதாக இந்த படத்தில் இருந்து ‛தேரே இஷ்க் மெயின்...' என்ற பாடலை கடந்த அக்., 18ம் தேதியன்று யு-டியூப் தளத்தில் வெளியிட்டனர். அர்ஜித் சிங் இந்த பாடலை பாடி உள்ளார். இர்ஷாத் கமில் பாடல் வரிகளை எழுதி இருந்தார். காதலின் வலியை சொல்லும் விதமாக வெளியான இந்த பாடல் மூன்று வாரங்களை கடந்துள்ள நிலையில் 100 மில்லியன் பார்வைகளை, அதாவது 10 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது.
இதேப்போல் தமிழில் இந்தபாடல் ‛ஓ காதலே' என்ற பெயரில் இருவாரங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. அந்த பாடலுக்கு 5.3 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. இந்தப்படம் இம்மாதம் 28ம் தேதி ஹிந்தி மட்டுமல்லாது தமிழிலும் வெளியாகிறது.




