மோகன்லாலின் தாயார் சாந்தகுமாரி காலமானார் | சரஸ்வதி பட படப்பிடிப்பை நிறைவு செய்த வரலட்சுமி | ஊட்டுகுளங்கரா பகவதி கோவிலில் அஜித் வழிபாடு | கண்ணீரை வரவழைத்தது : சிறை படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர் | வடமாநில இளைஞரை வெட்டிய போதை ஆசாமிகள் : மாரி செல்வராஜ் கடும் கண்டனம் | 2025 முதல் வெற்றி 'மதகஜராஜா': கடைசி வெற்றி 'சிறை' | தொழில் அதிபரிடம் ரூ.10 லட்சம் மோசடி : சொகுசு காருடன் மாயமான 'டிவி' நடிகை | சீரியல் நடிகை நந்தினி தற்கொலை | சூரியின் ‛மண்டாடி' படத்தில் இணைந்த இளம் நடிகர்! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை எப்போது? |

விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி என்ற படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். அதன் பிறகு தாரை தப்பட்டை, சர்க்கார், விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 என பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடிக்கிறார்.
வரலட்சுமி முதன்முறையாக ‛சரஸ்வதி' என்ற ஒரு படத்தை இயக்கி அதில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை தனது தங்கை பூஜாவுடன் இணைந்து தோசா டைரீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இதில் வரலட்சுமியுடன் ராதிகா சரத்குமார், பிரியாமணி, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.
நிறைவு நாளில் எடுத்த புகைப்படங்களை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வரலட்சுமி சரத்குமார். ‛‛இது ஒரு சிறந்த பயணம். படப்பிடிப்பில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி'' என பதிவிட்டு இருக்கிறார்.